'பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில்...' 'சோசியல் மீடியாவில் பரவிய தகவல்...' உண்மை என்ன...? - ஹசன் அலியின் 'மனைவி' பேட்டி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக கோப்பை டி-20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி எதிர்பாராதவிதமான தோல்வியை சந்தித்தது.

'பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில்...' 'சோசியல் மீடியாவில் பரவிய தகவல்...' உண்மை என்ன...? - ஹசன் அலியின் 'மனைவி' பேட்டி...!
Advertising
>
Advertising

19-வது ஓவரில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ வேட்டின் கேட்சை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தவறவிட்டதால் அடுத்த மூன்று பந்தில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து வேட் பாகிஸ்தான் அணிக்கு வேட்டு வைத்தார்.

Hassan Ali's wife says none of the fans intimidated

இதன் காரணமாக ஹசன்அலி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரின் குடும்பத்திற்கு ரசிகர்களிடம்இருந்து மிரட்டல்கள் வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

Hassan Ali's wife says none of the fans intimidated

இந்த நிலையில் அவரின் மனைவி ஷமியா அர்ஸு, 'பாகிஸ்தான் ரசிகர்களிடம் இருந்து எனக்கு, கணவர் மற்றும் மகளுக்கு எந்த மிரட்டல்களும் வரவில்லை' என தெரிவித்துள்ளார்.

சமுக வலைதளங்கள் வழியாக மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

ஷமியா அர்ஸு இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஜினியரான இவர் அமீரகத்தில் பணியாற்றி வந்தபோது ஹசன் அலியுடன் காதல் ஏற்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு  மகள் உள்ளார்.

HASSAN ALI, WIFE, PAKISTAN, SAMIYA ARZOO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்