அந்த ஒரு 'விஷயத்த' பண்ணிட்டு.. 2 நாள் தூங்காம கஷ்டப்பட்டேன்.. கடினமான வலி.. மனம் திறந்த பாகிஸ்தான் வீரர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதன்னுடைய தவறால், உலக கோப்பையை ஜெயிக்கும் வாய்ப்பை தவற விட்டதால், மனமுடைந்த பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி, முதல் முறையாக அது பற்றி மனம் திறந்துள்ளார்.
கடந்த ஆண்டு, நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பை போட்டியில், நியூசிலாந்து அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி கோப்பையைத் தட்டிச் சென்றிருந்தது.
இதற்கு முன்பாக, பாகிஸ்தான் அணியை அரை இறுதி போட்டியில் சந்தித்த ஆஸ்திரேலிய அணி, 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது.
வெற்றி இலக்கு
அப்போது, 96 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி, வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைவதில் சிக்கல் எழுந்தது. பாகிஸ்தான் கை அதிகம் ஓங்கியிருந்த நிலையில், அப்போது கைகோர்த்த வேடு - ஸ்டியோனிஸ் ஜோடி, சிறப்பாக ஆடி, 19 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
சிறந்த வாய்ப்பு
அதிலும் குறிப்பாக, பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி வீசிய 19 ஆவது ஓவரில், கடைசி 3 பந்துகளையும் சிக்சருக்கு பறக்க வட்ட மேத்யூ வேடு, ஒரு ஓவர் மீதம் வைத்து, தன்னுடைய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இதில், மூன்று சிக்ஸர்களை அடித்து, வேடு வெற்றி இலக்கை எட்டுவதற்கு முன்பு பாகிஸ்தான் அணி, ஒரு சிறந்த வாய்ப்பை தவற விட்டது.
வேடு அடித்த பந்தை, பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தவற விடவே, அடுத்த மூன்று பந்தில் தான் சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கை எட்டச் செய்தார். அந்த கேட்சை ஹாசன் அலி பிடித்திருந்தால், நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
மறக்க முடியவில்லை
இந்நிலையில், அந்த கேட்ச் தவற விட்டது பற்றி, ஹசன் அலி தற்போது மனம் திறந்துள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், 'என்னுடைய கிரிக்கெட் பயணத்தில், அது மிகவும் கடினமான தருணமாகும். அது மட்டுமில்லாமல், அந்த கேட்சை தவற விட்ட சம்பவத்தை, மறப்பது கூட எனக்கு கடினமாகத் தான் இருந்தது. இது பற்றி, யாரிடமும் நான் இதுவரை பேசவில்லை.
தூக்கம் தொலைத்த ஹசன் அலி
கேட்சை தவற விட்ட அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் சரிவர தூங்காமல் அவதிப்பட்டேன். அப்போது, என்னுடைய மனைவி என்னுடன் இருந்தார். நான் தூங்காமல் இருப்பதைக் கண்டு, அவரும் அதிக பதற்றம் அடைந்தார். இதன் பின்னர், நான் அமைதியாக இருந்தாலும், கேட்சை தவற விட்ட தருணம், மீண்டும் ஞாபகத்தில் வந்து கொண்டே தான் இருந்தது.
வழி கிடைத்தது
பங்களாதேஷ் தொடருக்காக பயணம் செய்த போது தான், இதிலிருந்து கடந்து செல்ல வேண்டுமென எனக்குள் நானே கூறிக் கொண்டேன். சோயப் அக்தர் என்னிடம் வந்து, நீ ஒரு புலி. நீ வீழ்ந்து ஒன்றும் போகவில்லை என ஆதரவாக பேசினார். அதே போல, இணையத்திலும், பலர் எனக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர். இதனால், நான் சீக்கிரமாக வேதனையில் இருந்து விடுபடவும் வழி கிடைத்தது' என ஹசன் அலி கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்