கைகுலுக்க வந்த நேரத்துல.. 'பிரபல' வீரர் செஞ்ச விஷயம்.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு சண்டை தான்'ங்க காரணம்.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி இருந்த போட்டியில், ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் சிக்கலில் தவித்துக் கொண்டிருந்த அணியை, இளம் வீரர் ரியான் பராக் தனியாளாக நின்று மீட்டார். கடைசி வரை களத்தில் இருந்த ரியான், 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மாற்றம் 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

மீண்டும் விமர்சனத்தை சந்தித்த 'RCB'

ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்ட ராஜஸ்தான், ரியான் பராக்கின் ஆட்டத்தின் மூலம், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, கடைசி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஓரளவுக்கு எளிய இலக்கு என்ற போதும், பெங்களூர் அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியது, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் மத்தியில் அதிகம் விமர்சனத்தை உண்டு பண்ணியுள்ளது.

மோதிக் கொண்ட ரியான் - ஹர்ஷல்

இதனிடையே, ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து முடிந்த சமயத்தில், இரண்டு வீரர்கள் மோதிக் கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ரியான் பராக் பேட்டிங் முடித்து விட்டு நடந்து செல்ல, திடீரென திரும்பி சென்று, ஹர்ஷல் படேலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவர் ஏதோ பேச, பதிலுக்கு ஹர்ஷல் படேலும் சில வார்த்தைகளை கோபத்தில் பரிமாறிக் கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் ஹர்ஷல் படேல் செய்த சம்பவம், மீண்டும் பரபரப்பை அதிகரித்துள்ளது. பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பி இருந்த ரியான், ஃபீல்டிங்கின் போதும் 4 முக்கிய கேட்ச்களைப் பிடித்திருந்தார். பெங்களூர் அணியின் கடைசி விக்கெட்டான ஹர்ஷல் படேல் கேட்சையும் ரியான் தான் எடுத்திருந்தார்.

கைகுலுக்க மறுத்த ஹர்ஷல் படேல்

தொடர்ந்து, போட்டி முடிவடைந்த பின்னர், இரு அணி வீரர்களும் கை குலுக்கி கொள்வது வழக்கம். அப்படி அனைத்து வீரர்களிடமும் கை குலுக்கி கொண்டே ரியான் பராக் வர, ஹர்ஷல் படேல் அருகே வந்ததும் அவரிடமும் கையை நீட்டி உள்ளார். ஆனால், அதனை மறுத்து கடந்து சென்ற ஹர்ஷல் படேல், மற்ற வீரர்களிடம் கை குலுக்கி கொண்டார்.

ரியான் மற்றும் ஹர்ஷல் இடையே பிரச்சனை சரியாகி இருக்கும் என ரசிகர்கள் கருதிய நிலையில், ரியான் பராக்கிடம் கைகுலுக்க மறுத்து, ஹர்ஷல் படேல் கடந்து சென்ற வீடியோவும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

RIYAN PARAG, HARSHAL PATEL, RCB VS RR, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்