தோனிதான் பெஸ்ட் கேப்டன்.. சிஎஸ்கே அணியில் விளையாட ஆசை.. ஆர்சிபி வீரர் ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் ஆர்சிபி வீரர் சிஎஸ்கே அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியிலும் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. அதேபோல் ஆர்சிபி அணி விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை தக்கவைத்துள்ளது.
இதில் ஆர்சிபி அணியில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெற ஹர்ஷல் படேல் முக்கிய காரணமாக இருந்தார். மேலும் தொடரிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்து பர்பில் தொப்பியையும் கைப்பற்றி இருந்தார். இப்படி உள்ள சூழலில் பெங்களூரு அணி இவரை தக்க வைக்காமல் விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. காரணமாக இந்த ஏலம் மெகா அளவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு அணி தன்னை தக்கவைக்காதது குறித்து ஹர்ஷல் படேல் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், ‘ஏல தொகையை கணக்கில் கொண்டு நான் பெங்களூரு அணியால் தக்கவைக்கப்படவில்லை என பயிற்சியாளர் மைக் ஹெசன் என்னிடம் கூறினார். அவர்கள் என்னை பெங்களூரு அணியில் விளையாட வைக்க மிகவும் விரும்பினார்கள். நானும் பெங்களூரு அணியில் விளையாட மிகவும் விரும்பினேன். ஏனென்றால் பெங்களூரு அணிக்காக 2021 சீசனில் விளையாடியதால்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுமையாக மாறியது. ஆனால் இதுவரை எந்த அணியில் இருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை’ என ஹர்ஷல் படேல் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தோனிதான் எனக்கு ரோல் மாடல். கிரிக்கெட் வரலாற்றில் அவர் ஒரு மிகச்சிறந்த கேப்டன். பெங்களூரு அணியில் இல்லாமல் போனால், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் விளையாட விரும்புகிறேன்’ என ஹர்ஷல் படேல் விருப்பம் தெரிவித்துள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த தடவ 'ஐபிஎல்' எங்க நடக்க போகுது??.. பிசிசிஐ எடுக்க போகும் முடிவு?. "சம்பவம் 'Loading' ரசிகர்களே"
- ஐபிஎல் ஏலம்.. "என்ன உங்க டீம்'ல எடுத்துப்பீங்களா பாஸ்??.." முன்னாள் 'சிஎஸ்கே' வீரர் கேள்வி.. கிண்டலாக பதில் சொன்ன ராகுல், சாஹல்
- நான் பாத்ததிலேயே ‘தோனி’ தாங்க ரொம்ப ஷார்ப்பான ப்ளேயர்.. இவர் கிட்ட இருந்து இப்படியொரு பாராட்டா..! குஷியில் ரசிகர்கள்..!
- "தோனி கிட்ட இந்த பழக்கமே கிடையாது.." அவரு ரொம்ப சிம்பிள்.. முதல் முறையாக மனம் திறந்த ரவி சாஸ்திரி
- எங்க நாட்டுல ஐபிஎல் போட்டியை நடத்துங்க.. செலவு ரொம்ப கம்மிதான்.. சத்தமில்லாமல் பிசிசிஐக்கு அழைப்பு விடுத்த நாடு..?
- ஸ்ரேயாஸ் எல்லாம் வேண்டாம்.. RCB-க்கு அடுத்த கேப்டனா அவரை போடுங்க.. யாருமே யோசிக்காத வீரர் பெயரை சொன்ன ஆகாஷ் சோப்ரா..!
- Lucknow Super Giants'.. இதுதான் எங்கள் அடையாளம்.. பெயரை வெளியிட்ட ஐபிஎல் அணி.. CSK கொடுத்த தரமான ரிப்ளை
- ‘அப்படி போடு’.. ரசிகர்கள் செலக்ஷன்.. லக்னோ அணிக்கு பெயர் என்ன தெரியுமா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- ஐபிஎல் ஏலத்துல கலந்துக்கல.. திடீர் ‘ஷாக்’ கொடுத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. என்ன காரணம்..?
- ‘தோனி ரசிகர்’.. நம்ம ‘சென்னை’ பையனுக்கு நியூசிலாந்து கிரிக்கெட்டில் கிடைத்த ‘மரண மாஸ்’ அங்கீகாரம்..!