"டீம்'ல எடுக்குறேன்னு நம்ப வெச்சு.." 4 வருடம் முன்பு நடந்த சம்பவம்.. வேதனையுடன் பகிர்ந்த பிரபல 'RCB' வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 39 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Advertising
>
Advertising

கடைசியாக, நடைபெற்றிருந்த லீக் போட்டியில், பெங்களூர் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது ராஜஸ்தான்.

144 ரன்கள் மட்டுமே அடித்திருந்த போதும், சிறப்பான பந்து வீச்சால், 115 ரன்களில் ஆர்சிபியை ஆல் அவுட் செய்து அசத்தி இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

விமர்சனத்தை சந்திக்கும் ஆர்சிபி

முதல் 7 போட்டிகளில், ஐந்தில் வெற்றி கண்டிருந்த ஆர்சிபி, ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுடன் அடுத்தடுத்து படு தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், 68 ரன்களில், ஆர்சிபி ஆல் அவுட்டாகி இருந்தது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

தொடர்ந்து, ராஜஸ்தான் அணிக்கு எதிராக 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய போதும், பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டானதால், இலக்கை எட்ட முடியாமல் போனது. இந்நிலையில், பெங்களூர் அணியிலுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து, கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2018 மெகா ஏலத்துக்கு முன்னாடி..

நடப்பு சீசனில், 8 போட்டிகள் ஆடியுள்ள ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல், மொத்தம் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில், மொத்தம் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தையும் அவர் பிடித்திருந்தார். தொடர்ந்து, ஆர்சிபி அணிக்காக சிறந்த பங்களிப்பை அளித்து வரும் ஹர்ஷல் படேல், 2018 ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது, தனக்கு நேர்ந்த சம்பவம் ஒன்றை பற்றி தற்போது மனம் திறந்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், ஹர்ஷல் படேலை டெல்லி அணி, அவரின் அடிப்படை தொகையான 20 லட்ச ரூபாய்க்கு அணியில் எடுத்திருந்தது. இது பற்றி பேசிய அவர், "2018 ஆம் ஆண்டு ஏலத்தின் போது, எனக்கு வேண்டி யாராவது போட்டி போட வேண்டும் என நான் விரும்பினேன். இது பணத்தை பற்றியது அல்ல. நான் கிரிக்கெட் விளையாட விரும்பினேன் என்பதற்காக தான். இதில், மிகவும் முரண்பாடான விஷயம் என்னவென்றால், வெவ்வேறு அணிகளை சேர்ந்த 3 - 4 வீரர்கள், என்னை ஏலத்தில் எடுக்கப் போவதாக கூறினார்கள். ஆனால், யாரும் என்னை எடுக்கவில்லை.

அந்த சமயத்தில், எனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவே நான் உணர்ந்தேன். நான் ஏமாற்றப்பட்டேன். சில இருண்ட சிந்தனைகளில் நான் மூழ்கி இருந்தேன். இதன் பிறகு, எனது விளையாட்டை நான் மீண்டும் உருவாக்கும் வேளைகளில் இறங்கினேன்" என ஹர்ஷல் படேல் தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

HARSHAL PATEL, IPL 2018 AUCTION, ஹர்ஷல் படேல், RCB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்