"சென்னை 'டீம்' 'மாஸ்' 'பண்ணனும்'னா... இது தான் ஒரே 'வழி'..." 'ஐடியா' சொன்ன 'வர்ணனையாளர்'... வைரலாகும் 'பதிவு'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போதைய ஐபிஎல் சீசனில் மிக மோசமாக ஆடி வரும் நிலையில், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது.

இதுவரை சென்னை அணி ஆடியுள்ள 7 போட்டிகளில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ள நிலையில், மீதமுள்ள 7 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் சென்னை அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்க்கொள்கிறது. 

சென்னை அணியை பொறுத்தவரையில், மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தான் தடுமாற்றம் கண்டுள்ளது. அதனை சரி செய்தால் மட்டுமே வரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றிகளை குவிக்க முடியும். இதனையடுத்து, கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே (Harsha Bhogle), சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் எப்படி சரி செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

பொதுவாக, ஐபிஎல் சீசனில் பாதி லீக் ஆட்டங்களில் அனைத்து அணிகளும் ஆடிய பிறகு, குறைந்தபட்சம் 2 போட்டிகள் கூட ஆடாத வீரரை மற்ற அணிகள் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். அப்படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரஹானேவை சென்னை அணி விலைக்கு எடுக்க வேண்டும் என ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார்.

'ரஹானே போன்ற சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தான் தற்போது சென்னை அணிக்கு தேவைப்படுகிறார். அதே போல ரஹானேவுக்கு டெல்லி அணியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவரை சென்னை அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என தனது டீவீட்டில் குறிப்பிட்டுள்ளார். 

இதுவரை, சென்னை அணி ஆடியுள்ள ஐபிஎல் தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்ததில்லை. ஆனால், தற்போது சென்னை அணி மிக மோசமான பார்மில் உள்ள நிலையில் அதனை சரி செய்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்