"ரொம்ப 'நன்றி'ங்க.. ஆனா, இப்டி மட்டும் கூப்பிட வேணாமே.." 'ஜடேஜா'வுக்கு கிடைத்த 'பாராட்டு'.. பதிலுக்கு அவர் சொன்ன ஒரே 'விஷயம்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்தது.

இதன் பிறகு, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவியதன் காரணமாக, ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ, காலவரையின்றி நிறுத்தி வைக்கவுள்ளதாக இன்று அறிவித்தது.

இதனால், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது குறித்தும், அல்லது வேறு நாடு அல்லது மைதானங்களில் வைத்து போட்டிகள் நடைபெறுவது குறித்தும், விரைவில் பிசிசிஐ முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே (Harsha Bhogle), இந்த சீசனில் சிஎஸ்கே (CSK) வீரர் ஒருவரின் ஆட்டம் குறித்து, மெய்சிலிர்த்து போய் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

'இந்த சீசனில் ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மர் யார் என்றால், அது ஒரே ஒரு வீரர் மட்டும் தான். அது வேறு யாருமில்லை, சார் ஜடேஜா (Jadeja) தான். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி ஓவரில் 37 ரன்கள் அடித்த ஜடேஜா, அதே போட்டியில், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியிருந்தார். ஒரே ஒருவர் இதனை எல்லாம் செய்வது என்பது நம்ப முடியாதது' என ஜடேஜாவின் ஆட்டத்திற்கு புகழாரம் சூட்டியிருந்தார்.

ஹர்ஷா போக்லே பேசியது தொடர்பான வீடியோவை, 'Cricbuzz' தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தன்னைப் பற்றி, ஹர்ஷா போக்லே பேசியதைக் கவனித்த ஜடேஜா, ' மிக்க நன்றி. ஆனால், நீங்கள் என்னை ரவீந்திர ஜடேஜா என அழைத்தால், நான் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன்' என கமெண்ட் செய்துள்ளார்.

 

ஐபிஎல் தொடரில் ஜொலித்ததன் மூலம், 'சார்' ஜடேஜா என்ற பட்டப்பெயர், ஜடேஜாவிற்கு கிடைத்தது. இதனை ஹர்ஷா போக்லே குறிப்பிடத்தற்கு தான், ஜடேஜா அப்படி ஒரு கமெண்டை செய்துள்ளார். இது தொடர்பான பதிவு, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்