‘ஒரே ஒரு டுவீட் தான்’!.. நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்.. வைரலாகும் பழைய டுவீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பஞ்சாப் கிங்ஸ் வீரரின் பழைய டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஒரே ஒரு டுவீட் தான்’!.. நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்.. வைரலாகும் பழைய டுவீட்..!

இந்தியாவில் நடைபெற்று வந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகிய வீரர்களுக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலாஜிக்கு கொரோனா உறுதி செய்யபட்டது.

Harpreet Brar’s birthday wish for Mia Khalifa on Twitter goes viral

இதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் சாஹா மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்தி வைத்தது. இதனால் மீண்டும் எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.

Harpreet Brar’s birthday wish for Mia Khalifa on Twitter goes viral

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஹர்பிரீத் ப்ரார் (Harpreet Brar) முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபாவுக்கு (Mia Khalifa) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பழைய டுவீட் தற்போது வைரலாகி வருகிறது. 25 வயதான ஹர்பிரீத் ப்ரார், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, விராட் கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் என மூன்று கிரிக்கெட் ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை ஹர்பிரீத் ப்ரார் எடுத்தார்.

அப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அந்த போட்டியில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஹர்பிரீத் ப்ரார் பெயர் பரவலாக அடிபட ஆரம்பித்தது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு 3 நாட்கள் கழித்து தாமதமான இனிய பிறந்த நாள் (Belated Happy Birthday) என மியா கலிஃபாவுக்கு ஹர்பிரீத் ப்ரார் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த டுவிட்டை தற்போது நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்