"World Cup'ல தோனி'ய பாத்ததும்.." பாகிஸ்தான் வீரர் ஆசையா கேட்ட விஷயம்.. கொஞ்சம் கூட யோசிக்காம 'தல' கொடுத்த சர்ப்ரைஸ்.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ராஃப், தோனி குறித்து தனது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்திய காதலன்.. கதையை முடிக்க Sketch போட்டுக் கொடுத்த காதலி.? களத்துல குதிச்ச நண்பர்கள்..

தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்றும் 'தல' என்றும் அன்போடு அழைக்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல்-ன் முதல் தொடரில் இருந்து ஒவ்வொரு அணிக்கும் கேப்டன்கள் மாறிக்கொண்டிருக்க, சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மட்டுமே இருந்து வந்தார். இடையில் ரவீந்திர ஜடேஜாவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்கினாலும் அவர், மீண்டும் தோனியிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டார்.

ஜெர்சி வேணும்

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ், உலகக்கோப்பை T20 போட்டியின்போது தோனியிடம் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்தது குறித்து மனம் திறந்திருக்கிறார். அந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசனையாளராக தோனி செயல்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி முடிவந்தடைந்த பிறகு தோனி பாகிஸ்தான் வீரர்களை சந்தித்து பேசினார். அப்போது தோனியிடம்,"உங்களுடைய CSK ஜெர்ஸி கிடைக்குமா?" எனக் கேட்டிருக்கிறார் ஹாரிஸ்.

அதற்கு, நிச்சயமாக வழங்குவதாக தோனி கூறியநிலையில், சொன்னபடியே ஜெர்சியை அவருக்கு அனுப்பியிருக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் பேசிய ஹாரிஸ்," அந்த 7 ஆம் எண் கொண்ட ஜெர்ஸி பல்லாயிரக்கணக்கான இதயங்களை வென்றிருக்கிறது. மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் அவர். அன்பாக பழகக்கூடியவர்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சிறப்பான எதிர்காலம்

இந்நிலையில், தனது பந்துவீச்சு குறித்து ஹர்திக் பாண்டியா பேசியதை நினைவுகூர்ந்திருக்கும் ஹாரிஸ்,"இந்திய அணியின் மேலாளர் ஆஸ்திரேலியாவில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசக்கூடிய சில நெட் பவுலர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இருந்தார். சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பந்துவீச இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என உணர்ந்தேன். வலைப் பயிற்சியில் புஜாரா மற்றும் விராட் கோலி போன்றவர்களுக்கு பந்து வீசினேன். ஹர்திக் பாண்டியா என்னுடன் பந்துவீசிக்கொண்டிருந்தார். நான் நன்றாக விளையாடுகிறேன் என்றும், நான் விரைவில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவேன் என்றும் அவர் என்னிடம் கூறினார்" என்றார்.

தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஹாரிஸ், தோனி குறித்து பேசியது கிரிக்கெட் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ADMK தலைமை அலுவலக சீல் அகற்ற கோரிய வழக்கு.. "சாவிய இவர்கிட்ட ஒப்படைங்க.."சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

MSDHONI, HARIS RAUF, PAKISTANI CRICKETER, PAKISTANI CRICKETER HARIS RAUF, ஹாரிஸ் ராஃப், பாகிஸ்தான் வீரர், தோனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்