"விராட் மாதிரி ஒரு பேட்ஸ்மேன்..".. உலகக்கோப்பை T20ல கோலி அடிச்ச சிக்ஸ்.. பல நாள் கழிச்சு மனம் திறந்த பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி குறித்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் பேசியிருக்கிறார்.
இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. சூப்பர் 12 சுற்றின் முடிவுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது. அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் லீக் போட்டியில் இந்திய அணியுடன் விளையாடியபோது நடந்த ஒரு சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். லீக்கின் ஒரு போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது இந்தியா. 160 ரன்களை இலக்காக கொண்டு சேசிங் செய்த இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. அப்போது விராட் கோலி நிதானமாக விளையாட துவங்கினார்.
விராட் கோலி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன. அத்தனைக்கும் தான் தகுதியானவர் என நிரூபித்தார் கோலி. கிட்டத்தட்ட இந்தியா தோற்றுவிட்டது என்ற நிலையில், பாண்டியாவுடன் இணைந்து கோலி காட்டிய வானவேடிக்கைகள் கிரிக்கெட் வரலாற்றில் ஏனென்றும் நிலைத்திருக்க போகிறது. உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு தனது பேட்டால் பதில் சொன்னார் கோலி. அந்தப் போட்டியில் 53 பந்துகளை சந்தித்த கோலி 82 ரன்களை விளாசி இந்தியாவுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அப்போது ஹாரிஸ் ராஃப் வீசிய 19 வது ஓவரில் ஸ்ட்ரைட்டாக ஒரு சிக்ஸரை அடித்து அனைவரையும் திகைப்படைய செய்தார் கோலி.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது மனம் திறந்திருக்கிறார் ஹாரிஸ். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹாரிஸிடம் ரசிகர் ஒருவர் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பி, அந்த தருணம் எப்படி இருந்தது? எனக் கேட்டார். இதற்கு ஹாரிஸ் பதில் அளிக்கும்போது,"நிச்சயமாக அது வலியை கொடுத்தது. நான் எதுவும் பேசவில்லை, ஆனால் அது என்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியது. ஏதோ தவறு நடந்துவிட்டது என்று நினைத்தேன். விராட் கோலி எப்படிப்பட்ட வீரர் என்பது கிரிக்கெட் தெரிந்த அனைவருக்கும் தெரியும். அந்த ஷாட்டை இப்போது ஆடியுள்ளார். அவர் அதை மீண்டும் செய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன். இத்தகைய ஷாட்கள் மிகவும் அரிதானவை. நீங்கள் அவற்றை மீண்டும் மீண்டும் அடிக்க முடியாது. அவரது டைமிங் சரியாக இருந்தது, அதனால் அது சிக்ஸருக்கு சென்றது" எனத் தெரிவித்திருக்கிறார்.
Also Read | மண்ணுக்குள் புதையும் இந்திய நகரம்.. பிரதமர் அலுலகத்தில் நடந்த அவசர ஆலோசனை.. திகிலூட்டும் பின்னணி..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 88 வருட வரலாற்றில் முதல் முறை.. இந்திய அணியில் இடம்பிடித்த கையோடு.. உனத்கட் படைத்த வரலாற்று சாதனை!!
- கார் விபத்தில் தன்னை காப்பாற்றியவர்களை நேரில் சந்தித்த ரிஷப் பண்ட்.. வைரலாகும் புகைப்படம்!!
- "நடுவரிடம் கோபப்பட்டாரா தீபக் ஹூடா?".. முடிவால் கடுப்பான வீரர்.. பரபரப்பு சம்பவம்!!
- "விராட், ரோகித்தால மட்டும் உலக கோப்பைய ஜெயிக்கவே முடியாது".. ஸ்ட்ராங்கா கபில் தேவ் சொன்ன வார்த்தை!!
- டி20 உலக கோப்பை : "Startingல அஸ்வின் நல்லா ஆடுனாரு, ஆனா".. "சாஹல் ஆடி இருக்கலாம்".. லிஸ்ட் போட்ட தினேஷ் கார்த்திக்!!
- சிக்ஸ் லைன் உள்ள கேட்ச்?.. அவுட்டா சிக்ஸரா என குழம்பிய ரசிகர்கள்.. உண்மையில் நடந்தது என்ன??
- "ரிஷப் பண்ட் உயிரை காப்பாத்திய 2 ஊழியர்கள் இவங்க தான்".. VVS லக்ஷ்மன் பகிர்ந்த புகைப்படம்.. நெகிழ்ச்சி பின்னணி..!
- விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்.. உடல்நிலை & அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர் அளித்த தகவல்! முழு விவரம்
- RISHABH PANT: 6 இடங்களில் காயம்.. முழங்காலில் தசைநார் கிழிவு.. ரிஷப் பண்ட்டின் உடல்நிலை குறித்து BCCI அறிக்கை..
- விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்.. டிவைடரில் மோதி தீப்பிடித்த கார்.. அதிர்ச்சி சம்பவம்!!