இது 'யார்' கையில கட்டியிருக்க 'வாட்ச்' தெரியுமா...? 'விலை ரொம்பலாம் இல்ல...' ஜஸ்ட் 'அஞ்சு கோடி' தான்...! - இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த 'இந்திய' கிரிக்கெட் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் தான் புதிய வாட்ச் வாங்கியிருப்பதாக பதிவிட்ட நிலையில் அதன் விலை திகைக்க வைக்கிறது.

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா தான் புதிதாக வாங்கிய வாட்சின் புகைப்படத்தை சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அதன் விலையை கேட்ட ரசிகர்கள் வாயாடைத்து போயுள்ளனர்.

பொதுவாக ஹர்திக் பாண்டியா தன் வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழக்கூடியவர். இவர் வாழும் வீடு, கார் போன்றவை ஒவ்வொன்றாக ரசித்து அனுபவித்து வாங்கி உபயோகித்து வருகிறார்.

ஹர்திக் பாண்டியா, மும்பையில் உள்ள ருஸ்ரம்ஜி பாராமவுண்ட் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 8 படுக்கை அறைகளுடன் 3838 சதுர அடி கொண்ட 30 கோடி ரூபாய் விலை கொண்ட ஆடம்பர அபார்ட்மெண்டை வாங்கியிருந்தார்.

அதோடு, கார் பிரியரான ஹர்திக் பாண்டியா லம்போர்கினி ஹூராகேன், ஆடி ஏ6, மெர்சிடஸ் ஏ.எம்.ஜி கி 63, போன்ற ஆடம்பர கார்களை வீட்டில் நிறுத்தி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராமில் 'படெக் பிலிப் நவுடிலஸ் பிளாட்டினம் 5711 வாட்' வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். இதன் விலை சுமார் 5 கோடி ரூபாயாம்.

இந்த வாட்ச் பிளாட்டினத்தினால் ஆனது எனவும், இதில் விலைமதிப்பற்ற 'எமரால்ட்' பயன்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் அதிக விலை என கூறப்படுகிறது. மேலும், இந்த வாட்ச் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்