"என்ன ஆனாலும் சரி.." IPL கோப்பையை வென்ற கையோட.. ஹர்திக் பாண்டியா சொன்ன 'அதிரடி' விஷயம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரில், வந்த வேகத்திலேயே ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியை, கிரிக்கெட் பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்ற்னர்.

Advertising
>
Advertising

Also Read | IPL 2022 : கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ்.. ஐபிஎல் Start ஆகுறதுக்கு முன்னாடி தோனி சொன்ன விஷயம்.. "கரெக்டா Connect ஆகுதே"

நடப்பு ஐபிஎல் தொடரில், புதிதாக இணைந்த இரு அணிகளில் ஒன்று, குஜராத் டைட்டன்ஸ். இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது தலைமையில், ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்ட குஜராத் அணி, லீக் தொடரில் முதலிடத்தை பிடித்தது மட்டுமில்லாமல், முதல் குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கும் நேரடியாக தகுதி பெற்றது.

முழுக்க முழுக்க ஆதிக்கம்

இதனைத் தொடர்ந்து, இறுதி போட்டியில் மீண்டும் ராஜஸ்தான் அணியை சந்தித்த குஜராத் அணி, ஆரம்பத்தில் இருந்தே போட்டியை காட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. 130 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணி எடுக்க, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து, இலக்கை எட்டிப் பிடித்தது. முதல் தொடரிலேயே மற்ற அணிகள்  மத்தியில் ஆதிக்கம் செலுத்தி, கோப்பையையும் கைப்பற்றி உள்ளது குஜராத் அணி.

அசத்திய ஹர்திக் பாண்டியா

அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. அணியை மிக சிறப்பாக தலைமை தாங்கி, வெற்றி பாதைக்கும் அழைத்து வந்துள்ளார். முன்னதாக, காயம் காரணமாக இந்திய அணியில் அதிகம் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரில் தன்னை ஒரு ஆல் ரவுண்டராக நிலை நிறுத்திக் கொண்டால் தான், இந்திய அணியில் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.

அதன்படி, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தனது திறனை நிரூபித்த ஹர்திக் பாண்டியா, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், ஐபிஎல் வெற்றிக்கு பின்னர், முக்கியமான கருத்து ஒன்றை ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ளார்.

என்னுடைய இலக்கு இது தான்..

"என்ன ஆனாலும் சரி, இந்த முறை இந்திய அணிக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும். இதற்காக நான் என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்க போகிறேன். நான் எப்போதும் அணிக்காக அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் தான். என்னை பொறுத்தவரையில், என்னுடைய இலக்கு என்பது எளிதான ஒன்று. எனது அணிக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் வேண்டும் என்பது மட்டும் தான்" என தெரிவித்துள்ளார்.

குஜராத் அணிக்காக இறுதி போட்டியில் ஆடி கோப்பையைக் கைப்பற்றியுள்ள ஹர்திக் பாண்டியா, இதற்கு முன்பு 4 முறை, ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி உள்ளார். அந்த நான்கு முறையும் மும்பை அணி தான் கோப்பையைக் கைப்பற்றி இருந்தது. இதனால், ஹர்திக் பாண்டியா ஆடிய 5 ஐபிஎல் போட்டிகளிலும் அவர் ஆடிய அணி தான் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "18 வருஷம் ஆகிடுச்சு., இருந்தும்.." நடிகை நக்மா போட்ட ட்வீட்.. அரசியல் வட்டாரத்தில் உருவான பரபரப்பு

CRICKET, HARDIK PANDYA, WORLD CUP, IPL FINAL, ஹர்திக் பாண்டியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்