ஹர்திக் பாண்டியாவிற்கு அடிக்க போகும் ஜாக்பாட்??.. ஆஹா, நடந்தா சும்மா மஜாவா இருக்கும் போலயே!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் அதிகம் இடம் கிடைக்காமல் இருந்து வரும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா குறித்து அசத்தல் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் ஹர்திக் பாண்டியா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஏற்பட்ட காயம் ஒன்றின் காரணமாக, பல மாதங்களாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும், அவர் ஆடவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை ஹர்திக் பாண்டியா ஆடி வந்தாலும், ஆல் ரவுண்டரான அவர் பந்து வீசாமல் இருந்து வந்தது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. அதே போல, பேட்டிங்கிலும் முன்பு போல, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால், இந்திய அணியிலும் அவரின் இடம், நெருக்கடியை சந்தித்துள்ளது.

கைபற்றிய சிஎஸ்கே

இந்த நிலையில் தான், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா எந்த அணிக்காக ஆடுவார் என்பது குறித்து, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதி இந்தியாவில் நடைபெற்றிருந்த நிலையில், மீதமுள்ள போட்டிகள் கொரோனா தொற்றின் காரணமாக, துபாயில் நடைபெற்றிருந்தது. இந்த தொடரை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றி அசத்தியிருந்தது.

புதிய அணிகள்

இதனைத் தொடர்ந்து, இந்தாண்டு ஐபிஎல் தொடரில், இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்படவுள்ளது. ஏற்கனவே, 8 அணிகள் ஐபிஎல் தொடரில் இடம்பெற்று வந்த நிலையில், புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் இணையவுள்ளன. புதிய அணிகள் இணைந்ததன் காரணமாக, மற்ற 8 அணிகளும், ஐபிஎல் விதிகளுக்குட்பட்டு, 2 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர்.

பிப்ரவரியில் மெகா ஏலம்?

இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, பும்ரா, ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பொல்லார்ட் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தக்க வைக்கப்படாமல் நீக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, அனைத்து அணிகளும் மீதமுள்ள வீரரர்களைத் தேர்வு செய்யும் ஐபிஎல் மெகா ஏலம், பிப்ரவரி மாதம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

வெளியாகும் தகவல்கள்

இந்நிலையில், மெகா ஏலத்திற்கு முன்பாக புதிதாக இணையப் போகும் அணிகள், மற்ற அணிகள் நீக்கிய வீரர்கள் பட்டியலில் இருந்து, 2 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என மொத்தம் 3 வீரர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள், எந்தெந்த வீரர்களை தேர்வு செய்வார்கள் என்பது பற்றி பலவிதமான தகவல்கள் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்தன.

கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா?

இதில், லக்னோ அணியில் கே எல் ராகுல் கேப்டனாக தேர்வாவார் என கூறப்பட்டது. அதே அணியில், வார்னர் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியானது. அதே போல, மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த சீசனில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, அகமதாபாத் அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள், தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

மேலும், இஷான் கிஷான் மற்றும் ரஷீத் கான் ஆகியோரும் அகமதாபாத் அணியில் இணையலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்திய அணியில் அதிகம் வாய்ப்பில்லாமல் நெருக்கடியில் இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

இதனிடையே, ஐபிஎல் அணிகளில் ஒன்றை, அவர் தலைமை தாங்குவதாக வெளிவரும் தகவல், உறுதியாகும் பட்சத்தில், நிச்சயம் தனது நெருக்கடியைக் கடந்து, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

IPL 2022, MUMBAI INDIANS, HARDIK PANDYA, IPL AUCTION, AHMEDABAD, மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் 2022, ஹர்திக் பாண்டியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்