ப்ளேயர் தப்பு பண்ணா 'தோனி' பாய் ரியாக்ஷன் இதான்! .. முதல் முறையாக போட்டு உடைத்த ஹர்திக் பாண்டியா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தோனியின் கேப்டன்சி குணம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ளது.

இதனிடையே,  2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் குறித்தும் அடிக்கடி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

புதிய ஐபிஎல் அணிகள்

இந்த சீசனில் புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் இணையவுள்ள நிலையில், அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்கள் பட்டியலையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, கே எல் ராகுல், மார்கஸ் ஸ்டியோனிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார்.

எதிர்பார்ப்பு

அதே போல, மற்றொரு அணியான அகமதாபாத், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் சுப்மன் கில் ஆகிய வீரர்களைத் தேர்வு செய்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படவுள்ளார். ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்த நிலையில், தற்போது புதிய ஐபிஎல் அணிக்கு தலைமை தாங்கவுள்ளதால், உற்சாகத்தில் உள்ளார். இதுவரை எந்த அணிக்கும் தலைமை தாங்காத ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி, எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

எதுவுமே தெரியவில்லை

இந்நிலையில், தான் ஒரு சிறந்த வீரராக மாற யார் காரணமாக இருந்தார்கள் என்பது பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'நான் அனைத்து வீரர்களிடம் இருந்தும் கிரிக்கெட்டின் பல நுணுக்கங்களைக் கற்றுள்ளேன். அதிலும் குறிப்பாக மஹி பாயிடம், நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். முதலில், நான் சர்வதேச அணிக்காக ஆட வாய்ப்பு கிடைத்த போது, எனக்கு எதுவும் சரிவர தெரியவில்லை.

இந்திய அணிக்குள் நுழைந்த போது, தோனி இருக்கிறார். எனது ஆட்டம் பற்றி அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று தான் நினைத்தேன். ஆனால், தோனி என்னிடம் அதிகம் பேசக் கூட இல்லை. பந்து எங்கே வீச வேண்டும் என்றும் என்னை அறிவுறுத்தவில்லை.

உணர்ந்து கொண்டேன்

அடிப்படையில், எனக்கு அவர் அதிக சுதந்திரம் தந்தார். நான் செய்யும் தவறுகளில் உள்ள குழப்பங்களை அறிந்து கொண்டு, அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என தோனி விரும்பியதை பல ஆண்டுகளுக்கு பிறகு உணர்ந்து கொண்டேன். அப்போது தான், என்னை அதிக நாட்கள் கிரிக்கெட்டில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதயும் தெரிந்து கொண்டேன்.
 

இனி வாய்ப்பில்லை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 போட்டியில் நான் அறிமுகமான போது, வீசிய முதல் ஓவரில் சுமார் 20 ரன்கள் வரை கொடுத்தேன். இதனால், இனிமேல் எனக்கு டி 20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் கூட போகலாம் என்றும் நினைத்தேன். ஆனால், எக்ஸ்ட்ரா கவர் பகுதியில் ஃபீல்டிங் நின்ற என்னை, தோனி மீண்டும் பந்து வீச அழைத்தார். 'என்னை தான் அழைக்கிறாரா?' என்று கூட நினைத்தேன்.

கவனித்து கொண்டே இருப்பார்

அதன் பிறகு பந்து வீச சென்ற நான், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினேன். அப்போது தான், தோனியிடம் இருந்து ஒரு விஷயத்தை புரிந்து கொண்டேன். ஒரு கேப்டனாக தான் இருப்பார் என்பதையே காட்டிக் கொள்ள மாட்டார். ஆனால், அவர் எப்போதும் உங்களுடன் தான் இருப்பார். அருகிலேயே இருந்து கொண்டு, நாம் மேம்பட்டு வருவதை கவனித்துக் கொண்டே தான் இருப்பார்' என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

தோனியின் கேப்டன்சி மற்றும் வழி காட்டுதல் பற்றி பேசியுள்ள ஹர்திக் பாண்டியா, நிச்சயம் தோனியைப் போன்ற ஒரு தலைமை பண்பை ஜபிஎல் தொடரில் காட்டுவார் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

MS DHONI, HARDIK PANDYA, IPL 2022, AHMEDABAD, CAPTAIN, ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 2022, எம்.எஸ். தோனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்