ஹர்திக் பாண்டியாகிட்ட செஞ்ச தில்லாலங்கடி வேலை?.. அடுத்த ஓவரிலேயே சிக்கிய நியூசி. வீரர்?.. அஸ்வின் போட்ட நச் ட்வீட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சமீபத்தில் நடந்திருந்தது.

Advertising
>
Advertising

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 அவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புகளுக்கு 349 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 200 ரன் அடித்து ஒருநாள் போட்டியில் கடந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி அடிய நியூசிலாந்து அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இருந்து தடுமாற, 7 ஆவது வீரராக வந்த மைக்கேல் பிரேஸ்வெல், தனியாளாக அதிரடி காட்டினார். இதனால், அவர்களுக்கும் வெற்றி வாய்ப்பு உருவாக, போட்டியில் விறுவிறுப்பும் தொற்றிக் கொண்டது. இருந்த போதிலும், கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் விழவே நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. 78 பந்துகளில் 140 ரன்கள் எடுத்த பிரேஸ்வெல், கடைசி விக்கெட்டாக வெளியேற இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கவும் செய்கிறது.

இந்த போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா அவுட்டான விதம், கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 40 ஆவது ஓவரில் டேரில் மிட்செல் பந்தை எதிர் கொண்டார் ஹர்திக் பாண்டியா. அவர் எதிர்கொண்ட பந்து ஒன்று பேட்டில் படாமல் கீப்பர் டாம் லதாம் கைக்கு சென்றது. அந்த சமயத்தில், ஸ்டம்பின் லைட்டுகள் எரியவே, நியூசிலாந்து அணி அவுட்டிற்கு அப்பீல் செய்தது. இதனை பரிசோதித்த மூன்றாவது நடுவரும் அவுட் என அறிவித்தார்.

ஆனால் இது தொடர்பான வீடியோவில் கீப்பர் டாம் லதாம் கிளவுஸ் தான் ஸ்டம்பின் மீது படுவதும், ஹர்திக் போல்டு ஆகவில்லை என்பதும் தெரிகிறது. அப்படி இருந்தும் அவுட்டில்லை என்ற சூழலில் ஹர்திக் பாண்டியா அவுட் என் அறிவிக்கப்பட்டது, கிரிக்கெட் வட்டாரத்தில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பல கிரிக்கெட் பிரபலங்கள் கூட இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஹர்திக் பாண்டியா வெளியேறிய அடுத்த ஓவரிலேயே டாம் லதாம் செய்த தவறு வெட்ட வெளிச்சமானது. ஹர்திக் பாண்டியா அவுட்டான அடுத்த ஓவரிலேயே பிரேஸ்வெல் வீசிய பந்தை சுப்மன் கில் எதிர்கொண்டார். அந்த பந்தை அவர் கட் ஷாட் ஆட முயல, பந்து அவர் பேட்டில் பட்டு அருகிலேயே விழுந்ததாக தெரிகிறது. சுப்மன் கில் முன் இறங்கி ஆட முயன்ற சமயத்தில், கீப்பர் நின்ற டாம் லதாம், கில் அடிப்பதற்கு முன்பாகவே தனது க்ளவுஸ் கொண்டு ஸ்டம்பை தொடுவதும் தெரிகிறது. இதே போல தான் ஹர்திக் பாண்டியா அவுட்டான சமயத்தில் அவர் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

டாம் லதாம் செயல் குறித்து பல கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி இருக்கையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இது பற்றி தனது ட்வீட்டில், "அந்த விக்கெட் குறித்து ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் பார்ப்பது, ரீப்ளே பார்ப்பதை மறந்து விடுங்கள். சுப்மன் கில் அடித்த கட் ஷாட், ஹர்திக் பாண்டியா அவுட்டில் என்பதை நிரூபித்து விட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

RAVICHANDRAN ASHWIN, HARDIKPANDYA, IND VS NZ, TOM LATHAM, SHUBMAN GILL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்