Watch: ஏன் இந்த ‘கொலவெறி’.. நூலிழையில் தப்பிய ‘தலை’.. மரண பயத்தை காட்டிய ஆர்ச்சர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் 152 கிமீ வேகத்தில் வீசிய பந்து தலையில் அடிபடாமல் ஹர்திக் பாண்ட்யா நூலிழையில் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை மும்பை அணி குவித்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து ஹர்திக் பாண்ட்யாவின் தலையில் படமால் நூலிழையில் சென்றது. இப்போட்டியின் 19-வது ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார். அப்போது பந்து ஹர்திக் பாண்ட்யாவின் தலையை நோக்கி வேகமாக வந்தது. இதனைப் பார்த்த பாண்ட்யா உடனே தலையை கீழே குனிந்து கொண்டார். இதனால் நூலிழையில் அவரது தலையில் படாமல் பந்து சென்றது.

152 கிமீ வேகத்தில் வந்த இந்த பந்தை ராஜஸ்தான் விக்கெட் கீப்பர் பட்லரும் பிடிக்க முடியாமல் கீழே விழுந்தார். இதனை அடுத்து அம்பயர் இதற்கு நோ பால் மற்றும் ஃப்ரீ ஹிட் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்