டி 20 கோப்பையை வென்றதும்.. கேப்டன் ஹர்திக் பாண்டியா செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்த இளம் வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தி உள்ளது.

Advertising
>
Advertising

                                        Image Credit : BCCI

Also Read | 13 வருஷமா வீட்டுல இருந்த சோஃபா.. எதார்த்தமா பிரிச்சி பார்த்த பெண்.. ஒரு நிமிஷம் அரண்டு போய்ட்டாங்க..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதி இருந்தது. முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால், கடைசி போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகவும் மாறி இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்த அதிரடியாக ஆடி ரன் குவித்திருந்தது. அதிலும் தொடக்க வீரர் சுப்மன் கில் ஆரம்பத்திலிருந்தே பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி இருந்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 63 பந்துகளில் 12 ஃபோர்கள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 126 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார்.

Image Credit : BCCI

டி20 போட்டியில் அவர் அடித்த சதம், இந்திய அணிக்காக ஒரு வீரர் அடித்த தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகவும் டி 20 போட்டிகளில் பதிவாகி உள்ளது. அதேபோல டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்று சிறப்பையும் சுப்மன் கில் பெற்றுள்ளார்.

20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, முதல் ஓவரில் இருந்தே விக்கெட்டுகளை இழக்க தொடங்க, 13 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

Image Credit : BCCI

டி 20 போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் இந்திய பெற்ற வெற்றியாகவும் இது மாறி உள்ளது. இந்நிலையில், தொடரை கைப்பற்றிய பிறகு கோப்பையை கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு வீரரிடம் கொடுத்தது தொடர்பான வீடியோ, அதிகம் வைரலாகி வருகிறது.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி தனது திறனை நிரூபித்திருந்த இளம் வீரர் ப்ரித்வி ஷாவிற்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் இடம் கிடைத்திருந்தது. ஆனால், 3 போட்டிகளிலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இது பெரிய அளவில் விவாதங்களையும் கிரிக்கெட் வட்டாரத்தில் கிளப்பி இருந்தது.

Image Credit : BCCI

இந்த நிலையில் தான், டி 20 கோப்பையை வாங்கிய ஹர்திக் பாண்டியா, நேராக அதனை ப்ரித்வி ஷா கையில் கொண்டு ஒப்படைத்திருந்தார். இதனை அறிந்ததும் அவர் மனம் நெகிழ்ந்து போக, கோப்பையை உயர்த்தியும் காட்டி இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

Also Read | "ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு..".. தென்காசி பரபரப்பு சம்பவத்தில் புதிய வீடியோ வெளியிட்ட குஜராத் பெண்.!

CRICKET, HARDIK PANDYA, TEAM INDIA, IND VS NZ, T20 SERIES, T 20 TROPHY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்