'ஜஸ்ட் மிஸ்ஸானாலும்’... ‘நடராஜனுக்கு இது பொருத்தமானது’... ‘மகிழ்வித்து மகிழ்ந்த இரு வீரர்கள்’... ‘ அமேசிங் என்று கொண்டாடும் ரசிகர்கள்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில், தொடர் நாயகன் விருதுபெற்ற ஹர்திக் பாண்ட்யா, ஊக்கப்படுத்துவிதமாக அந்த விருதை நடராஜனுக்கு தந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

முதுகுவலி காரணமாக நவ்தீவ் சைனிக்கு பதிலாக, சர்வதேச போட்டியில் முதன்முதலாக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் 3-வது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியிலேயே, பவர்பிளேயில் விக்கெட்டுகள் வீழ்த்தி அதிரடி காட்டினார். அடுத்தடுத்து களமிறங்கிய டி20 போட்டிகளிலும் குறைவான ரன்களுக்கு, விக்கெட்டுகளை சாய்த்து வந்தார்.

இன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியிலும், இவர் பவுலிங் செய்த 10.4 ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் வேடின் எல்டபிள்யூ விக்கெட் விழுந்து இருக்க வேண்டியது. ஆனால், நடுவர் எல்பிடபிள்யூ கொடுக்காதது, முன்னதாகவே பெரிய திரையில் ரீப்ளே காட்டப்பட்டது, அதற்கு ஆஸ்திரேலிய வீரர் வேட் ஆட்சேபம் தெரிவித்தது, விராட் கோலி தாமதமாக டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டது உள்ளிட்ட குழப்பங்களால், நடராஜன் விக்கெட் எடுக்க முடியாமல் பறிபோனது.

எனினும், 4 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்திருந்தார். இந்திய அணி இன்றைய போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும், அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. கடந்த போட்டியின்போதே ஆட்டநாயகன் விருது, நடராஜனுக்கு தான் இது கிடைக்க வேண்டியது என்று கூறியிருந்தநிலையில், இன்று தனக்கு கிடைத்த தொடர் ஆட்ட நாயகன் விருதை, நடராஜனுக்கு கொடுத்து மகிழ்ந்தார். 

அதேபோல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், டி20 தொடரின் வெற்றி விருதை நடராஜனுக்கு கொடுத்தார். பின்பு, அவர் கையில் இரு டிராஃபிக்களும் இருக்க குரூப்பாக போட்டோ எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா மற்றும் விராட் கோலியின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்