கடைசி ஓவர்ல ஏன் பாண்ட்யா அப்படி பண்ணார்..? தினேஷ் கார்த்திக் அதிருப்தி.. கடுப்பான நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா செய்த செயல் நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ‘தனக்கு தானே தாலி கட்டி கல்யாணம்’.. சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிய இளம்பெண்.. வைரல் போட்டோ..!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 48 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 76 ரன்களை குவித்து அசத்தினார். ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 36 ரன்களும், ரிஷப் பந்த் 29 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 31 ரன்களும் எடுத்தனர். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 211 ரன்களை இந்திய அணி குவித்து.

இதனை அடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது இதில் அதிகபட்சமாக ரஸ்ஸி வான் டெர் டுசென் 75 ரன்களும், டேவிட் மில்லர் 64 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்று வருகிறது. அதில் இப்போட்டியின் கடைசி ஓவரின் 5-வது பந்தை ஹர்திக் பாண்ட்யா டீம் மிட் விக்கெட் திசையில் அடித்தார். ஆனால் ரன் ஏதும் ஹர்திக் பாண்ட்யா ஓடவில்லை. இதனால் மறுமுனையில் இருந்த தினேஷ் கார்த்திக் அதிருப்தி அடைந்தார்.

இதனை அடுத்து கடைசி பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களை மட்டுமே எடுத்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் கடைசி கட்டத்தில் களமிறங்கி சிக்சர், பவுண்டரிகளை தினேஷ் கார்த்திக் விளாசினார். அதனால் நேற்றைய போட்டியிலும் இதுபோல் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்ட்யா சிங்கிள் ஓடி தினேஷ் கார்த்திக்கிற்கு ஸ்டைர்க் கொடுக்காமல் இருந்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.

 

Also Read | வைரலாகும் ஆஷிஷ் நெஹ்ராவின் இன்ஸ்டாகிராம் page… அப்படி அதுல என்ன இருக்கு?

 

CRICKET, HARDIK PANDYA, DINESH KARTHIK, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்