"இது எப்படிங்க அவுட்டு?".. சர்ச்சையை கிளப்பிய ஹர்திக் பாண்டியா விக்கெட்.. கொதித்தெழுந்த கிரிக்கெட் பிரபலங்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடர்களை வெற்றிகரமாக கைப்பற்றி இருந்த இந்திய அணி, தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் ஆடி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | SAT20 : "அல்ஷாரி ஜோசப், ஷெப்பர்டு பந்து வீச்சால் வெற்றி சாத்தியமானது" - JSK VS PC மேட்ச் பத்தி அனிருத்தா ஸ்ரீகாந்த்.!

மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் உள்ளிட்ட தொடர்களை ஆடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.

அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையே முதலாவதாக ஒரு நாள் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், 208 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். சச்சின், சேவாக், ரோஹித், இஷான் கிஷன் ஆகியோருக்கு பின் ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். 149 பந்துகளில் 19 ஃபோர்கள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 208 ரன்கள் எடுத்த சுப்மன் கில், ஒரு நாள் போட்டியில் இளம் வயதில் 200 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் வசமாக்கி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் ஆரம்பத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. 131 ரன்களில் 6 விக்கெட்டுகளை அந்த அணி இழந்ததால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், ஏழாவது வீரராக களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல், போட்டியின் முடிவை மாற்றி எழுதும் வகையில் ஆடி இருந்தார். அடுத்தடுத்து சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் என அதிரடி காட்டிய மைக்கேல் பிரேஸ்வெல், 78 பந்துகளில் 140 ரன்கள் எடுத்திருந்தார்.

இவரது அதிரடியால் நியூசிலாந்து அணி இலக்கை நெருங்கி வந்த நிலையில், கடைசி ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸராக மாற்றி இருந்த பிரேஸ்வெல், அதற்கடுத்த பந்தில் அவுட் ஆக நேர்ந்தது. கடைசி விக்கெட்டாக அவர் சென்றதால் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா அவுட்டான விதம், கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 40 ஆவது ஓவரில் டேரில் மிட்செல் பந்தை எதிர் கொண்டார் ஹர்திக் பாண்டியா. அவர் எதிர்கொண்ட பந்து ஒன்று பேட்டில் படாமல் கீப்பர் டாம் லதாம் கைக்கு சென்றது. அந்த சமயத்தில், ஸ்டம்பின் லைட்டுகள் எரியவே, நியூசிலாந்து அணி அவுட்டிற்கு அப்பீல் செய்தது. இதனை பரிசோதித்த மூன்றாவது நடுவரும் அவுட் என அறிவித்தார்.

ஆனால் இது தொடர்பான வீடியோவில் கீப்பர் டாம் லதாம் கிளவுஸ் தான் ஸ்டம்பின் மீது படுவதும், ஹர்திக் போல்டு ஆகவில்லை என்பதும் தெரிகிறது. அப்படி இருந்தும் அவுட்டில்லை என்ற சூழலில் ஹர்திக் பாண்டியா அவுட் என் அறிவிக்கப்பட்டது, கிரிக்கெட் வட்டாரத்தில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பல கிரிக்கெட் பிரபலங்கள் கூட இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்த பிரிட்டோரியா கேபிடல்ஸ்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு விக்கெட்..!

CRICKET, HARDIK PANDYA, HARDIK PANDYA CONTROVERSY, NEW ZEALAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்