VIDEO: ரன் அவுட்டில் இருந்து ‘தப்பிக்க’ வேகமாக ஓடிய பாண்ட்யா.. திடீரென ‘குறுக்கே’ வந்த ஆப்கான் விக்கெட் கீப்பர்.. ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் மீது ஹர்திக் பாண்ட்யா மோதிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை தொடரின் 33-வது லீக் போட்டியில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நமி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த கூட்டணியை ஆப்கானிஸ்தான் அணியால் நீண்ட நேரமாக பிரிக்கவே முடியவில்லை. இதில் ரோஹித் ஷர்மா 74 ரன்களும், கே.எல்.ராகுல் 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனை அடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் (27 ரன்கள்) மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (35 ரன்கள்) ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த கூட்டணியை கடைசி வரை ஆப்கானிஸ்தான் அணியால் பிரிக்க முடியவில்லை. அதனால் 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்களை இந்தியா குவித்தது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் ரோஹித் ஷர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஷாஜாத் மீது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மோதி கீழே விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் நவீன்-உல்-ஹக் வீசிய போட்டியின் 18-வது ஓவரின் முதல் பந்தை ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார். அந்த பந்தை சிக்சருக்கு விளாச முயல, ஆனால் அது கேட்சானது. இதனை எதிர்பாராதவிதமாக நஜிபுல்லா சத்ரன் தவறவிட்டார்.

இதனிடையே 1 ரன் ஓடியிருந்த ஹர்திக் பாண்ட்யா, வேகமாக 2-வது ரன்னுக்கு ஓடினார். இதனால் அவரை ரன் அவுட்டாக வேகமாக பந்தை வீசினார். ஆனால் அதற்குள் ஹர்திக் பாண்ட்யா கிரிஸுக்குள் வந்துள்ளார். அப்போது விக்கெட் கீப்பர் முகமது ஷாஜாத் எதிர்பாராதவிதமாக குறுக்கே வரவே, ஹர்திக் பாண்ட்யா அவர் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர். இதனை அடுத்து வேகமாக வந்த பிசியோ, ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை மேற்கொண்டார். காயம் ஏற்படவில்லை என தெரிந்ததும், ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து விளையாடினார்.

முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்காக ஹர்திக் பாண்ட்யா அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அதனால் நீண்ட காலமாக பவுலிங் செய்யாமல் இருந்தார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த சூழலில் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 2 ஓவர்கள் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

HARDIKPANDYA, MOHAMMADSHAHZAD, INDVAFG, T20WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்