"தோனி தான் அதுக்கு காரணம்ன்னா.. நாங்க 10 பேரும்.. லெஸி குடிக்கவா போனோம்".. கடுப்பான ஹர்பஜன் .. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த ஹர்பஜன் சிங், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவித்திருந்தார்.
2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, சர்வதேச அணியில் ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கெடுத்து வந்த அவர், கடைசியாக கொல்கத்தா அணிக்காக ஆடி இருந்தார்.
பின்னர், தன்னுடைய ஓய்வினை அறிவித்த பிறகு, பிசிசிஐ பற்றி வெளிப்படையாக ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்த சில கருத்துக்கள், அதிகம் பரபரப்பினை உண்டு பண்ணி இருந்தது.
இரண்டு உலக கோப்பைகள்
முன்னதாக, இந்திய அணி 2007 டி 20 உலக கோப்பையை வென்ற போதும், அதற்கடுத்து 2011 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி இருந்த போதும், இரண்டு தொடர்களிலும் இடம்பிடித்திருந்த ஹர்பஜன் சிங், இந்திய அணிக்காக முக்கிய பங்காற்றி இருந்தார். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையின் இறுதி போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக சிக்ஸர் அடித்து, போட்டியை கேப்டன் தோனி முடித்து வைத்ததை எந்தவொரு இந்தியராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
இந்நிலையில், இந்த உலக கோப்பை தொடர்பாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து ஒன்று தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான இறுதி போட்டியில், சேவாக் மற்றும் சச்சின் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பிறகு, கம்பீர், கோலி மற்றும் தோனி ஆகியோர் ரன் சேர்த்து, கோப்பையைக் கைப்பற்ற உதவி இருந்தனர்.
தோனி மட்டும் தான் காரணமா?
இந்த தொடர் முழுக்க, சச்சின், சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான் உள்ளிட்ட பலரும் சிறந்த முறையில் இந்திய அணிக்காக செயல்பட்டிருந்தனர். ஆனால், தோனியை மட்டும் உலக கோப்பை வென்றதன் காரணமாக குறிப்பிடுவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி ஒன்றின் முன்பு லைவ் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த ஹர்பஜன் சிங், "ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை கைப்பற்றினால், ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வென்றது என குறிப்பிடுவார்கள். ஆனால், இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றிய போது, அனைவரும் எம்.எஸ். தோனி உலக கோப்பையை வென்றதாக குறிப்பிட்டார்கள்.
அப்படி என்றால், மீதமுள்ள 10 பேரும் லஸ்ஸி குடிக்க சென்று விட்டார்களா?. மற்ற 10 பேரும் என்ன செய்தார்கள்?. கவுதம் கம்பீர் என்ன செய்தார்?. மற்றவர்கள் என்ன செய்தார்கள்?. இது ஒரு அணியின் விளையாட்டு. 7 முதல் 8 வீரர்கள் நன்றாக ஆடினால் தான் உங்களின் அணி முன்னேறும்" என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "மேட்ச் தோத்தாலும் மனுஷன் வேற லெவல் தான்.." போட்டிக்கு பின்னர் கோலி செய்த செயல்.. "ஃபேன்ஸ் மனசுல நங்கூரம் மாதிரி நின்னுட்டீங்க"
- “தோனி அந்த முடிவை சொன்னதும் ரெய்னா அழுதுட்டாரு”.. பல வருசத்துக்கு முன்னாடி நடந்த உருக்கமான சம்பவம்.. இளம் வீரர் சொன்ன சீக்ரெட்..!
- “தோனி சொன்ன அந்த அட்வைஸ்”.. RCB அணிக்கு எதிரா சிக்சர் மழை பொழிந்த CSK சிவம் துபே சொன்ன சீக்ரெட்..!
- IPL 2022: ‘இது நடக்குற வரை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”.. பெண் ரசிகை எழுதியிருந்த அந்த வாசகம்.. ‘செம’ வைரல்..!
- ‘இதனால தாங்க எல்லாருக்கும் இவரை பிடிக்குது’.. பதட்டத்தில் இருந்த இளம் வீரர்.. தோனி செய்த காரியம்..!
- இது லிஸ்ட்லயே இல்லையே.. தீபக் சஹாருக்கு பதிலா இவரா..? நெட்டிசன்கள் சொன்ன அந்த வீரரின் பெயர்..!
- CSK vs RCB: இன்னைக்காவது அந்த ‘இளம்’ வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- SRH அணிக்கு வந்த புது சிக்கல்.. சில போட்டிகளை தவற விடும் ‘தமிழக’ வீரர்.. என்ன காரணம்..?
- "ஹர்திக் பாண்டியா மட்டும் இந்த மேட்ச்ல 50 அடிக்கட்டும்".. ஸ்டேடியத்தில் பெட் கட்டிய ரசிகர்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!
- ‘இனி அவர் விளையாடுறது டவுட் தான்?’.. சோகத்தில் உள்ள CSK ரசிகர்களுக்கு இடியாய் வந்த புது தகவல்..!