“இந்த சீசன் முழுக்க சூப்பரா விளையாடி இருக்காங்க.. IPL கப் அந்த டீமுக்கு தான்”.. அடிச்சி சொல்லும் ஹர்பஜன் சிங்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து இன்று (27.05.2022) நடைபெறவுள்ள பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இப்போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் எந்த அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘தற்போது உள்ள ஆர்சிபி அணியில் மிகவும் நல்ல வீரர்கள் உள்ளனர். அவர்களது பேட்டிங் மற்றும் பௌலிங் வரிசையை பார்க்கும்போது, அந்த அணிதான் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என நினைக்கிறேன். இந்த வருடம் ஆர்சிபி அணிதான் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டது. அதனால் அவர்கள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது’ என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட பெங்களூரு அணி கோப்பையை வென்றதில்லை. அதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்குமா? என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆத்தீ.. என்னா கோவம்.. தோல்வியால் அதிருப்தி.. வைரலாகும் கம்பீர் போட்டோ..!
- ‘யாருப்பா அந்த பையன்?’.. அம்பயர் அவுட் கொடுக்குறதுக்கு முன்னாடியே வெளியேறிய வீரர்.. பாராட்டும் ரசிகர்கள்..!
- கேட்ச் பிடிக்கும்போது வழுக்கி விழுந்த கேப்டன்.. நல்லவேளை காயம் ஏற்படல.. இல்லைன்னு ஃபைனல்ல அவ்ளோ தான்..!
- IPL 2022 : "அவருக்காக இந்த டீம் தான் கப் ஜெயிக்கணும்.." முன்னாள் 'CSK' வீரர் ரெய்னாவின் விருப்பம் என்ன??..
- “அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருப்பேன்”… ‘Mr 360’ டிவில்லியர்ஸ் நம்பிக்கை… உற்சாகத்தில் RCB ரசிகர்கள்
- 3 வருஷத்துக்கு அப்புறம் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்… அறிவிப்பு வந்ததும் போட்ட வைரல் Tweet
- மும்பை அணிக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் போட்ட ட்வீட்.. "அதுவும் அவர் போட்ட ஃபோட்டோ இருக்கே.. அது தான் 'செம' வைரல்"
- MI அணியின் கையில் RCB-ன் ப்ளே ஆஃப் வாய்ப்பு.. ரிசல்ட் இன்னைக்கு தெரிஞ்சிடும்.. எப்படி தெரியுமா..?
- “ஏன் அந்த பையனுக்கு ஒரு மேட்ச்ல கூட வாய்ப்பு தரல?”.. ஒரு வழியாக கடைசி போட்டியில் விளக்கம் கொடுத்த கேப்டன் தோனி..!
- "என்கிட்ட என்ன கேக்க போறீங்க?.." ஜாஸ் பட்லர் பேச வந்ததும்.. கோலி சொன்ன விஷயம்.. செம வைரல்