சேப்பாக்கில் நம் 'தலைவன் இருக்கிறான்' ... 'மாஸ்டர்', 'வலிமை' ஆரம்பித்து .... 'அண்ணாத்த' வரை இழுத்த ஹர்பஜன் சிங் !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் சென்னை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ஹர்பஜன் சிங் செய்த ட்வீட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல் போட்டிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மற்ற ஐ.பி.எல் அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விவரங்கள் தினமும் இணையதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன. சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது, கேப்டன் தோனியின் பேட்டிங் வீடியோ என தினமும் சென்னை அணி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான ஹர்பஜன் சிங் செய்த ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது முதல் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது சென்னை வந்துள்ள ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ' இந்த ஐ.பி.எல் நம்ம டீம் செம்ம வலிமை மாப்பி. தளபதி ஸ்டைலில் தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெரில' என பல சினிமா வார்த்தைகளை ஒன்று சேர்த்து நீண்ட வாசகம் ஒன்றை தமிழில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் முடிந்ததும் ஹர்பஜன் சிங் செய்த டிவீட்கள் வைரலாகி வந்த நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஹர்பஜன் சிங் ட்வீட் செய்ய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தல' கீப்பிங், 'சின்ன தல' பேட்டிங் ... 'சத்தியமா இது கனவு இல்லங்க' ... 'CSKFIED' ஆன ரசிகர்கள் !
- 'ஐபிஎல் போட்டியில் விளையாட வைச்சிருந்த’... ‘என்னோட கிரிக்கெட் பேட்டை காணல’... 'சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வேதனை’
- இப்டியே 'விசில்' அடிக்க போறேன்... '75 வயசு' பாட்டி செய்த வேலை... 2K கிட்ஸ்க்கே செம டப் 'குடுப்பாங்க' போல!
- "2020ல CSKதான்.. தல தோனி-க்கு ரொம்ப பிடிச்சது இதான்".. பிராவோ பகிரும் சீக்ரெட்ஸ்.. வைரல் குத்தாட்டம்.. வீடியோ!
- பாக்கத் தானே போறே ... இந்த 'தோனி'யோட ஆட்டத்த ... ஐ.பி.எல் போட்டிக்கு முன் வெளியான சிக்ஸர் சம்பவம் !
- 'பாண்டியா' பராக் ... ஃபயர் மோடில் மிரட்டும் பாண்டியா... 'ஒரு' நிமிடம் தலை சுற்றி நின்ற எதிரணி !
- VIDEO: ‘தல’ய பாக்கணும்.. எகிறி குதிச்சு உள்ளே போன ரசிகர்.. ‘தோனி..தோனி’!.. விண்ணைப் பிளந்த ‘விசில்’ சத்தம்..!
- 'நம்பர் 1' , 'நம்பர் 2' எல்லாம் பாப்பா விளையாட்டு ... ஐ ஆம் தி ஒன்லி ஒன் 'சூப்பர்' ஒன் ... 'வயதான' போதும் ஸ்டம்ப்புகளை தெறிக்க விட்ட 'யார்க்கர்' ஸ்பெஷலிஸ்ட் !
- தம்பி 'செஞ்சுரி' அடிக்க ... அண்ணன் 'லவ்' மூட்ல இயங்க ... 'ஆக்டிவ்' மோடில் இருக்கும் 'பாண்டியா பிரதர்ஸ்' !
- இது 'டீம்' இல்ல 'விக்ரமன்' சார் படம் ... சேப்பாக்கத்தில் கால் பதித்த 'சி.எஸ்.கே'... ஆர்ப்பரித்த 'ரசிகர்'கள் !