"நான் செஞ்சது பெரிய 'தப்பு' தான்.. சர்ச்சையை ஏற்படுத்திய 'பதிவு'.. பகிரங்கமாக 'மன்னிப்பு' கேட்ட 'ஹர்பஜன் சிங்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் (Harbhajan Singh), இன்ஸ்டாவில் நேற்று செய்திருந்த பதிவு ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

ஆபரேஷன் ப்ளூஸ்டார் (Operation BlueStar) என்ற பெயரில், பொற்கோவிலுக்குள் கொல்லப்பட்ட தீவிரவாதிகளான Jarnail Singh Bhindranwale உள்ளிட்ட மேலும் சிலருக்கு, ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் 37 ஆவது ஆண்டு நினைவு தினத்தில், 'தியாகிகளுக்கு வீரவணக்கம்' என குறிப்பிட்டு, பொற்கோவிலுக்குள் கொல்லப்பட்ட காலிஸ்தானி தீவிரவாதி Jarnail Singh மற்றும் வேறு சிலரின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார். அது மட்டுமில்லாமல், 1984 ஜூன் 1 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை, பொற்கோவிலுக்குள் நடந்த ஆபரேஷனில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு மனமார்ந்த அஞ்சலி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தீவிரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்தி, ஹர்பஜன் சிங் அவரை தியாகிகள் என குறிப்பிட்டு பதிவிட்டிருந்த நிலையில், கொஞ்ச நேரத்திலேயே அவரது பதிவு, கடுமையான விமர்சனத்தையும், கிண்டலையும் சம்பாதித்திருந்தது. இந்நிலையில், தனது பதிவிற்கு மன்னிப்பு தெரிவித்து, ட்விட்டரில் பதிவு ஒன்றையும் ஹர்பஜன் சிங் இன்று வெளியிட்டுள்ளார்.



அதில், 'நேற்று நான் போட்ட இன்ஸ்டா பதிவு பற்றி, தெளிவுபடுத்தி அதற்கு மன்னிப்பையும் கேட்க விரும்புகிறேன். வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ் எதனைக் குறிக்கிறது என்பதை உணராமல், அதனை பகிர்ந்து விட்டேன். அது எனது தவறு தான். நான் அதனை ஏற்றுக் கொள்கிறேன். நான் பதிவிட்ட புகைப்படங்களில் இருப்பவர்களை எந்த கட்டத்திலும் நான் ஆதரிக்கவில்லை.

 

நான் ஒரு சீக்கியர். நான் இந்தியாவிற்காக போராடுபவனே இல்லாமல், எதிரானவன் அல்ல. தேசத்தின் உணர்வை புண்படுத்தியதற்காக, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உண்மையில், எனது தேசத்திற்கு எதிரான எந்த குழுவையும் நான் ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன். எனது நாட்டிற்காக, கடந்த 20 ஆண்டுகள், ரத்தத்தையும் வியர்வையும் சிந்தியுள்ளேன். இந்தியாவுக்கு எதிரான எதையும் ஒருபோதும் நான் ஆதரிக்க மாட்டேன். ஜெய்ஹிந்த்' என தனது பகிரங்க மன்னிப்பை ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்