'ஹர்பஜனை சீண்டிய பாகிஸ்தான் வீரர்...' 'பழசு எல்லாத்தையும் கிளறி படுபயங்கரமாக மாறிய சண்டை...' - போர்க்களமான டிவிட்டர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்குக்கும், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கும் டிவிட்டரில் கடும் வாக்குவாதமே நடந்து வருகிறது.

Advertising
>
Advertising

துபாயில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்-12 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பல ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடர் என்பதால் இரு நாட்டு ரசிகர்களும் பெரிதும் காத்திருந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. அதோடு கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே ட்விட்டரில் மிதமான வாக்குவாதம் ஏற்பட்டது.

அதோடு, ட்விட்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கும், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது.

 

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தன்னுடைய ட்விட்டரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற பழைய டெஸ்ட் போட்டியின் காணொளியை ட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோவில் 4 பந்துகளில் ஷாகித் அப்ரிடி 4 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

 

இதனை பார்த்த ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டரில், ஸ்பாட் பிக்சிங் ஊழலை நினைவுபடுத்தி, பிக்சிங் செய்ததற்காக அமீர் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டார் என்பதையும் குத்தி காட்டியுள்ளார்.

 

இதற்கு அமீர் ஹர்பஜன் சிங் பொருத்தமான பதிலைக் கொடுத்து, 'லார்ட்ஸில் நோ பால் எப்படி நடந்தது? எவ்வளவு எடுக்கப்பட்டது, யார் கொடுத்தது? டெஸ்ட் கிரிக்கெட் என்பது No Ball எப்படி இருக்கும்? உங்களுக்கும் உங்கள் மற்ற தோழர்களுக்கும் அவமானம், இந்த அழகான ஆட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டீர்கள்' என பதிவிட்டுள்ளார்.

 

அதன்பின் ஹர்பஜன் சிங் ஆசிய கோப்பை போட்டியில் முகமது அமிரின் பந்தில் சிக்ஸர் அடிக்கும் பழைய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் விளையாடிய ஒரே ஒரு போடிக்கு ட்விட்டரில் கடும் போரே நடந்து வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்