2011 உலக கோப்பை : தோனி கொடுத்த ஐடியா!!.. அடுத்த ஓவரில் நடந்த மேஜிக்.. ஹர்பஜன் சிங் பகிர்ந்த சுவாரஸ்யம்!!..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 2011 ஆம் ஆண்டு, தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஐம்பது ஓவர் உலக கோப்பையை சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வரலாறு படைத்ததை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது.
இலங்கை அணிக்கு எதிரான இறுதி போட்டியில், தோனி சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைத்த தருணத்தை இன்று நினைவு கூர்ந்தாலும் பலருக்கும் புல்லரிக்கும்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையின் அரை இறுதி போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பற்றி தற்போது சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 260 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மிஸ்பா உல் ஹக் மற்றும் உமர் அக்மல் ஆகியோர் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தனர். இதனால், போட்டியின் முடிவு எப்படி மாறும் என்பதே விறுவிறுப்பாக இருந்தது.
அந்த சமயத்தில் தண்ணீர் இடைவேளையின் போது கேப்டன் தோனி தன்னிடம் பகிர்ந்த விஷயத்தினை ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார். "அதுவரை நான் 5 ஓவர்கள் வீசி, விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் 27 ரன்கள் கொடுத்திருந்தேன். அந்த சமயத்தில் வந்த தண்ணீர் இடைவேளையின் போது என்னிடம் தோனி ஒரு அறிவுரை கூறினார்.
Around the wicket பகுதியில் நீங்கள் பந்து வீசுங்கள் என என்னிடம் அவர் கூறினார். மிஸ்பா மற்றும் உமர் அக்மல் சிறப்பாக ஆடி கொண்டிருந்ததால், அவர்கள் பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவில்லை என்றால், ஆபத்தாகி விடும் என்ற நிலை இருந்தது. அதன் பின்னர் பந்து வீச வந்த நான், வெற்றிக்காக பிரார்த்தனை செய்து விட்டு பந்து போட்டேன். அந்த ஓவரின் முதல் பந்திலேயே நான் Around the wicket பகுதியில் இருந்து வீச, உமர் அக்மல் அவுட்டானார்" என ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
இதனையடுத்து, அப்ரிடி விக்கெட்டையும் ஹர்பஜன் சிங் எடுத்திருந்தார். உமர் அக்மல் மற்றும் மிஸ்பா பார்ட்னர்ஷிப்பை தோனி அறிவுரையின் பெயரில் பந்து வீசி, ஹர்பஜன் சிங் பிரிக்கவே, போட்டி இந்தியாவின் பக்கம் மாறி, வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேற வழி வகுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
"76-ஆவது விடுதலை நாள் விழா.." அரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த 'சர்ப்ரைஸ்'!!
தொடர்புடைய செய்திகள்
- இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. பரபரப்பான இறுதி கட்டத்தில் இந்திய அணி.. சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் தல தோனி..!
- ஆசிய கோப்பை தொடர் : "இந்திய அணிக்கு இப்டி ஒரு சிக்கல் வந்துடுச்சே.." சமாளிக்குமா 'ரோஹித் அண்ட் கோ?'
- இன்ஸ்டா லைவில் சர்ப்ரைஸாக வந்த தோனி.. ரிஷப் பந்த் வைத்த 'Request'.. அடுத்த செகண்ட்டே நடந்த வைரல் 'சம்பவம்'..
- "World Cup'ல தோனி'ய பாத்ததும்.." பாகிஸ்தான் வீரர் ஆசையா கேட்ட விஷயம்.. கொஞ்சம் கூட யோசிக்காம 'தல' கொடுத்த சர்ப்ரைஸ்.!
- "அட, இவரு என்னப்பா இங்க??.." தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளம் இந்திய வீரர்.. வைரலாகும் புகைப்படம்
- தோனி'யோட 41 ஆவது பிறந்தநாள்.. ஆந்திரா ரசிகர்கள் செய்த வேற மாதிரி சம்பவம்... இணையத்தில் இப்ப செம Trending..
- சிஎஸ்கே குறித்த சர்ச்சை கேள்வி.. இரண்டே வார்த்தையில் ஜடேஜா சொன்ன பதில்.. "சும்மா நச்சுன்னு சொல்லி சோலி'ய முடிச்சுட்டாரு..
- "120 வருஷத்துல இதான் முதல் தடவ.." ரிஷப் பண்ட் செய்த வேற லெவல் சாதனை.. தோனியோட '17' வருஷ ரெக்கார்டும் காலி..
- ‘இது அப்படியே தோனி ஸ்டைல்’.. ஹர்திக் கேப்டன்ஷி பற்றி முன்னாள் வீரர் சொன்ன ‘சூப்பர்’ தகவல்..!
- "தோனி கூட அவர கம்பேர் பண்றதா??, நியாயமே இல்லங்க.." கங்குலி சொன்ன பரபரப்பு கருத்து