விரக்தியில் ஹர்பஜன் சிங்?.. "யாருமே எனக்கு சப்போர்ட் பண்ணல.." ஓய்வுக்கு பின் சொன்ன பரபரப்பான விஷயம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் மூத்த வீரராக இருந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது 23 ஆண்டு கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள், ஹர்பஜன் சிங்குடன் ஆடிய வீரார்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் ஆகியோர் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர். அணில் கும்ப்ளேவிற்கு பிறகு இந்திய அணி கண்ட மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இந்திய அணிக்காக சுமார் 350 சர்வதேச போட்டிகள் வரை ஒட்டு மொத்தமாக ஆடியுள்ள ஹர்பஜன், சுமார் 700 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து அசத்தியுள்ளார். அதே போல, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி, அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார்.
கடைசியாக 2016 ஆம் ஆண்டு, இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் ஆடியிருந்தார் ஹர்பஜன் சிங். அதன் பிறகு, அவருக்கு இந்திய அணியில் அதிகம் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆடி வந்த அவர், தற்போது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, சர்வதேச அணியில் அதிகம் புறக்கணிக்கப்பட்டு வந்தார்.
பதில் கிடைக்கவில்லை
இந்நிலையில், இதுபற்றி தற்போது பேசியுள்ள ஹர்பஜன் சிங், '400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ள ஒருவர், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அதற்கான காரணத்தையும் யாரும் குறிப்பிடவில்லை. இதனால், நிறைய கேள்விகள் என் மனதில் எழுந்தது. அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவது பற்றி பலரிடம் நான் கேட்டேன். ஆனால், யாரும் எனக்கு தகுந்த பதில் தெரிவிக்கவில்லை.
ஆதரவு இல்லை
அதன் மூலம் எனக்கு ஆதரவு கிடைத்திருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அப்படி, சரியான நேரத்தில் எனக்கு ஆதரவு கிடைத்திருந்தால், நிச்சயம் 500 - 550 விக்கெட்கள் எடுத்து, அதன் பிறகு ஓய்வு முடிவை அறிவித்திருப்பேன். ஏனென்றால், 400 விக்கெட்டுகளை நான் வீழ்த்திய போது, எனக்கு 31 வயது தான் ஆகியிருந்தது. இன்னும் 3 முதல் 4 வருடங்கள் நான் தொடர்ந்து ஆடியிருந்தால், நிச்சயம் 500 விக்கெட்டுகளை சாய்த்திருப்பேன். ஆனால், அப்படி நிகழவில்லை.
மதிப்பு
நான் ஆடாமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தன. அவற்றை எல்லாம் நான் தோண்ட நினைத்தால், நான் நிறைய விஷயங்களை இழக்க நேர்ந்திருக்கும். 400 விக்கெட்டுகள் எடுத்த பிறகாவது, உங்களது அணியிலுள்ள வீரர் மதிப்பும் மரியாதையையும் பெற தகுதி உள்ளவர் என்றால், அதனை அவருக்கு அளிக்க வேண்டும். ஆனால், அந்த முடிவு ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் உள்ளது' என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஓய்வு முடிவை அறிவித்த ஹர்பஜன் சிங்.. இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான், ஆனா.. உருகிய ரசிகர்கள்..
- 'உங்களால மட்டுந்தான் பாஜி எனக்கு இது சாத்தியமாச்சு...'- உருகும் அஸ்வின்!
- ஹர்பஜன் சிங்கை ‘ஓவர்டேக்’ செய்த அஸ்வின்! கபில் தேவ்-க்குக்குப் பின் கிடைத்த கௌரவம்..!
- விக்கெட் எடுக்குறதுல புது சாதனைக்குத் தயாரான ‘நம்ம ஊர்’ வீரர்..!- பின்னுக்குத் தள்ளப்படும் ஹர்பஜன் சாதனை..!
- உங்க பின்னாடி ஒரு பெரிய லைன் நிக்குது… ஜாக்கிரதையா ஆடுங்க..!- யாருக்கு சொல்றார் நம்ம ‘பாஜி’..?
- “இதெல்லாம் ரொம்ப தப்புங்க… நாங்கலாம் இப்படியா பண்ணோம்”- வார்னரை குத்திக்காட்டும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!
- T20 World Cup: ‘இதுதான் நான் விளையாடும் கடைசி போட்டி’!.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ‘திடீரென’ ஓய்வை அறிவித்த வீரர்..!
- 'ஹர்பஜனை சீண்டிய பாகிஸ்தான் வீரர்...' 'பழசு எல்லாத்தையும் கிளறி படுபயங்கரமாக மாறிய சண்டை...' - போர்க்களமான டிவிட்டர்...!
- VIDEO: ஹாய் பஜ்ஜி...! நாங்க 'வாக் ஓவர்' கொடுக்கணுமா? ஐயோ, பாவம் நீங்க... 'கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க...' - முன்னாள் இந்திய வீரரை 'கலாய்த்து' தள்ளிய அக்தர்...!
- VIDEO: 'என் ரசிகர்கள் முன்னால...' 'நான் விளையாடுற கடைசி போட்டி...' - ஒய்வு குறித்து 'அதிகாரப்பூர்வ' தகவலை வெளியிட்ட 'தல' தோனி...!