“ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு மன்னிப்பு கேட்டோம்”.. கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத சண்டை.. ஹர்பஜன் சிங் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உடன் ஏற்பட்ட சண்டை சமாதானத்தில் முடிந்தது குறித்து ஹர்பஜன்சிங் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையில் விளையாடியது. அப்போது சிட்னியில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குரங்கு என திட்டியதாக புகார் எழுந்தது. இது அப்போது மிகப் பெரும் சர்ச்சையானது.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் அம்பயரிடம் புகார் செய்ததை அடுத்து, ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதித்தால், ஆஸ்திரேலியா தொடரை ரத்து செய்துவிட்டு நாடு திரும்புவோம் என பிசிசிஐ கிடுக்கிப்பிடி போட்டது. அதனால் வேறு வழியின்றி ஹர்பஜன் சிங் மீதான தடை நீக்கப்பட்டது. இது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக மாறியது.
இதன் பின்னர் இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் தற்போது மனம் திறந்துள்ளார். அதில், ‘நாங்கள் சண்டிகரில் இருந்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அந்த தொடரில் நாங்கள் ஒரு போட்டியில் விளையாடி முடித்ததும், எனது நண்பரின் இடத்திற்கு இருவரும் சென்றோம். அங்குதான் நாங்கள் முதல் முறையாக கட்டிப்பிடித்து ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டோம். இந்த பிரச்சனையை முன்பே சுமூகமான முறையில் தீர்த்திருக்கலாம் என்று நாங்கள் அப்போது உணர்ந்தோம். இந்த சம்பவத்தை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பலரும் போட்டோ எடுத்தனர்’ என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘முதல் முறையாக மும்பை அணி எங்களை ஒன்றாக தேர்வு செய்தபோது எதற்காக இப்படி செய்தார்கள் என்று நினைத்தேன். சைமண்ட்ஸ் உடன் எப்படி இணைந்து விளையாடப் போகிறோம் என யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் என் மீது கோபத்துடன் இருப்பார் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் நாங்கள் இருவரும் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிட தொடங்கினோம். அந்த சமயத்தில் எங்களுக்கு இடையே சண்டை இருந்ததாக ஊடகங்கள் எழுதின. ஆனாலும் மும்பை அணிக்காக விளையாடும் போது எங்களுக்குள் முன்பு எந்தவித சண்டையும் ஏற்படவில்லை என்பது போலவே உணர்ந்தோம்’ என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கழுத்துக்கு மேல கத்தி தொங்குது.. ரொம்ப உஷாரா விளையாடுங்க’.. 2 சீனியர் வீரர்களை எச்சரித்த ஹர்பஜன் சிங்..!
- இதுல எப்படிங்க இவர் பேரை ‘மிஸ்’ பண்ணீங்க..? ஹர்பஜன் சிங் வெளியிட்ட லிஸ்ட்.. கொதித்த ‘கோலி’-ன் ரசிகர்கள்..!
- எந்த டீமும் பண்ணாத ‘தப்பு’.. இதுதான் இந்தியாவோட தோல்விக்கு முக்கிய காரணம்.. தவறை சுட்டிக்காட்டிய ஹர்பஜன் சிங்..!
- ‘தாயும், சேயும் நல்லா இருக்காங்க’!.. முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு பிறந்த ஆண் குழந்தை.. குவியும் வாழ்த்து..!
- 'ஏன் இந்த ஓரவஞ்சனை'?.. தோனி - கங்குலி பிறந்தநாள் கொண்டாட்டம்!.. ஹர்பஜன் செய்த 'அந்த' காரியம்!.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... 'யார் ஜெயிச்சாலும்... தொடர் நாயகன் விருது இவருக்கு தான் கொடுக்கணும்'!.. விடாப்பிடியாக இருக்கும் ஹர்பஜன்!
- VIDEO: ‘ஏன் எல்லாருக்கும் உங்கள பிடிக்குதுன்னு இப்பதான் தெரியுது’!.. வேகமாக வந்த ‘சின்ன தல’ செஞ்ச காரியம்.. எமோஷ்னல் ஆகி கட்டிப்பிடித்த வீரர்..!
- ‘எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபிஎல் ஏலம்’!.. கேதர் ஜாதவ்-ன் அடிப்படை விலை என்ன தெரியுமா..? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!
- “அன்னைக்குதான் ஃபர்ஸ்ட் டைம் அவர் அப்டி பண்றத பாத்தேன்.. அது மறக்க முடியாத நிகழ்வு!”.. ஹர்பஜன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
- ‘சென்னைங்கறது ஊர் பேரு’.. ஆனா ‘மெட்ராஸ் ஒரு உணர்ச்சி’.. வைரலாகும் ‘பிரபல சிஎஸ்கே வீரரின் ட்வீட்’..