இப்படி ஒரு ஷாட்டை யாருமே Try கூட பண்ணிருக்க மாட்டாங்க.. காயத்துடன் ஹனுமா விஹாரி அடிச்ச பவுண்டரி.. அசந்துபோன வீரர்கள்..வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஞ்சிக் கோப்பை தொடரில் ஒரு கையில் காயம் அடைந்த போதிலும் மற்றொரு கையைக் கொண்டே இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங் ஆடியிருக்கிறார் ஹனுமா விஹாரி. அப்போது வித்தியாசமான முறையில் அவர் பவுண்டரி அடித்தது எதிரணி வீரர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | கிளி பார்த்த வேலை.. உரிமையாளருக்கு ₹74 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்.. விநோத பின்னணி..!
ரஞ்சிக் கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆந்திரா அணி விளையாடி வருகிறது. இந்தூரில் நடைபெற்று வரும் போட்டியில் இரண்டாவது நாளில் ஆந்திரா முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 379 ரன்கள் குவித்திருந்தது. இப்போட்டியின் முதல் நாளில் ஹனுமா விஹாரி பேட்டிங் செய்த போது ஆவேஷ் கான் வீசிய வந்து அவருடைய மணிக்கட்டை தாக்கியது.
Images are subject to © copyright to their respective owners.
இதனால் காயமடைந்த விஹாரி ரிடையர்ட் ஹர்ட் முறைப்படி வெளியேறினார். அப்போது ஸ்கேன் எடுக்கப்பட, அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் விஹாரி மீண்டும் பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். வலது கை பேட்ஸ்மேன் ஆன விஹாரி காயம் காரணமாக இடது கை பேட்ஸ்மேன் ஆக விளையாடத் தொடங்கினார். ஒரு கையில் தாக்குப்பிடித்து ஆடிய அவர் 57 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில் விஹாரி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனை தொடர்ந்து மத்திய பிரதேச அணி தனது முதல் இன்னிங்சில் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆந்திரா தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 76/9 என்ற நிலையில் கடைசி பேட்ஸ்மேனாக இந்த இன்னிங்சிலும் விஹாரி உள்ளே வந்தார். ஒரு கையில் பேட்டை பிடித்தபடி விளையாடிய விஹாரி 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரியும் அடங்கும். பேட்டை ஒரு கையில் உயர்த்தி பிடித்தபடி பந்தை அவர் எதிர்கொண்டது எதிரணி வீரர்களையே ஆச்சர்யப்பட செய்தது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | முதல்வர் ஸ்டாலின் சென்ற ரயில் பாதியில் நிறுத்தம்.. அபாய சங்கிலியை பெண் இழுத்ததால் பரபரப்பு..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஊரே அம்மாவ சூனியக்காரின்னு சொல்லி ஒதுக்கிச்சு".. கேலி செய்த கிராமம்.. உலக கோப்பை ஜெயிச்சு வீராங்கனை கொடுத்த பதிலடி!!
- சூரிய குமார் யாதவின் வெறித்தனமான கேட்ச்.. மிரண்டு போன வர்ணனையாளர்கள்.. வைரல் வீடியோ..!
- எலும்பு முறிவு.. ஒரே கையில் பேட்டிங்.. கடைசிவரை போராடிய ஹனுமா விஹாரி.. குவியும் பாராட்டுகள்.. வீடியோ..!
- டி 20 கோப்பையை வென்றதும்.. கேப்டன் ஹர்திக் பாண்டியா செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்த இளம் வீரர்!!
- "IPL வரலாற்றுலேயே அவர் தான் பெஸ்ட் பிளேயர்".. கிரிக்கெட் ஜாம்பவான்கள் கைகாட்டிய வீரர்..!
- "இது கனவா.. நனவா?".. விராட் கோலியிடமிருந்து வந்த பாராட்டு.. சர்ப்ரைஸான இளம் இந்திய கிரிக்கெட் வீராங்கனை..!
- உலகக்கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி.. ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா கொடுத்த மரியாதை.. வைரல் வீடியோ..!
- மகளின் கிரிக்கெட் கனவுக்காக நிலத்தை எல்லாம் விற்ற அப்பா.. இந்தியாவையே பெருமைப்பட வச்ச மகள்.. நெகிழ்ச்சி பின்னணி..!
- "நான்தான் 370 டிகிரில பேட்டிங் ஆட கத்துக்கொடுத்தேன்".. கலாய்த்த சஹால்.. சூரிய குமார் யாதவின் பங்கமான கமெண்ட்😂..!
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. முன்னாள் CSK வீரரின் திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!