"இதுக்கு அப்புறமும் இந்த மாதிரி பேசிட்டு 'ஆன்லைன்' பக்கம் வருவீங்க??.." ட்விட்டரில் 'கேலி' செய்த 'ரசிகர்'.. தரமான பதிலடி மூலம் வாயடைக்க வைத்த 'இந்திய' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, இந்தியாவில் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இந்த தொற்று மூலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரான ஹனுமா விஹாரி (Hanuma Vihari), தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகம் ஆக்டிவாக இருப்பது மட்டுமில்லாமல், கொரோனா தொடர்பான பல பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல், ஆக்சிஜன் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும் இடங்களிலும், அது பற்றிய தகவலை பகிர்ந்து, தன்னாலான உதவியையும் செய்து வருகிறார். இதனிடையே, ஹனுமா விஹாரியை கிண்டல் செய்வது போல ரசிகர் போட்ட ட்வீட் ஒன்றிற்கு, ஹனுமா விஹாரி கொடுத்துள்ள பதிலடி தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தனக்காக இரண்டு மசால் தோசையும், தேங்காய் சட்னியும் கொண்டு வரும் படி ஹனுமா விஹாரியிடம் அந்த ரசிகர் கிண்டலாக தெரிவித்தார். இதனை அப்படியே விடாத ஹனுமா விஹாரி, பதிலுக்கு அந்த ரசிகரிடம், 'இந்தியாவில் தற்போது பலர், கொடிய தொற்றின் காரணமாக, கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். அதே போல, நீங்களும் இருந்தால் நான் உதவி செய்திருப்பேன். ஆனால், நீங்கள் வேறு ஏதோ நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன். என்னை மன்னிக்கவும்' என தகுந்த பதிலடியைக் கொடுத்துள்ளார்.


 

அந்த ரசிகர் தனது ட்வீட்டை, அதன் பிறகு நீக்கினாலும், இது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்கள் மற்றும் ஹனுமா விஹாரியின் அசத்தல் பதிலடி, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்