‘பிரபல கிரிக்கெட் வீரர் செய்த விபரீத செயல்’.. பறிபோன உலகக் கோப்பை வாய்ப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் உலகக் கோப்பையில் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 30 வயதான அலெக்ஸ் கேல்ஸ் கடந்த 2011 ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2014 -ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அலெக்ஸ் கேல்ஸ் போதை மருத்து பயன்படுத்தியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்  கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரை 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து இருந்தது. மேலும் அலெக்ஸ் கேல்ஸ் வரயிருக்கும் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரில் விளையாட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அலெக்ஸ் போதை மருந்து பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் உறுதியாதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து அவர் நீக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனால் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு அலெக்ஸுக்கு பறிபோயுள்ளது.

ICCWORLDCUP2019, ALEX HALES, ICC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்