Video : 'நடுவர்' கொடுத்த 'அவுட்'... தலை சுற்ற வைத்த முன்னணி வீரரின் 'செயல்'... ரவுண்டு கட்டிய 'முன்னாள்' வீரர்கள்... சர்ச்சையை ஏற்படுத்திய 'சம்பவம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், நிகழ்ந்துள்ள சம்பவம் ஒன்று, கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 232 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 47 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. முன்னதாக, இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, தொடக்க வீரர் குணதிலகா, ஃபீல்டரை ஃபீல்டிங் செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, அவர் ஆட்டமிழக்க நேரிட்டது.
பொல்லார்ட் வீசிய பந்தை குணதிலகா தனதருகே தட்டி வைத்த நிலையில், அதில் ரன் ஓட முதலில் முயன்றுள்ளார். ஆனால், பீல்டர் ஒருவர் அருகில் வர, மீண்டும் க்ரீஸுக்குள் செல்ல குணதிலகா முயன்ற போது, பந்தின் மீது மிதித்துள்ளார். இதனால், அவரை ரன் அவுட் செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, பொல்லார்ட் அவுட் அப்பீல் செய்தார். தொடர்ந்து, மூன்றாம் நடுவரும், அவுட் எனக்கூற, இந்த முடிவால் இலங்கை பயிற்சியாளர் மற்றும் சக வீரர்கள் அதிருப்தியடைந்தனர்.
அவர் 55 ரன்களில் அவுட்டான நிலையில், அவர் களத்தில் நின்றிருந்தால், நிச்சயம் இலங்கை அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவியிருக்கும் என இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே கூறியுள்ளார். இந்நிலையில், இந்த விக்கெட் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு சிலர், இது அவருக்கு தெரியாமல் நடந்தது என்றும், மேலும் சிலர், அவர் வேண்டுமென்றே செய்தார் என்றும் இரு வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் போது, பிட்ச் பற்றிய விமர்சனமும், டிஆர்எஸ் முறை தொடர்பான விவாதங்களும், அதிகம் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அப்படி ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது இந்த சம்பவம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்