‘சீனியர்களை நம்பியதே தோல்விக்குக் காரணம்..’ உலகக் கோப்பைக்குப் பிறகு மனம் திறந்துள்ள கேப்டன்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பையில் சீனியர் வீரர்கள் சரியாக ஒத்துழைப்பு தராததே தோல்விக்குக் காரணம் என குல்பாதின் நயீப் தெரிவித்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையில் விளையாடிய 9 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக மோசமாகத் தோல்வியடைந்த போதும், இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றிற்கு எதிரான போட்டிகளில் கடுமையாகப் போராடியது ஆஃப்கானிஸ்தான்.

உலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து குல்பாதின் நயீப்  நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தோல்வி குறித்து முதல்முறையாக மனம்திறந்துள்ள குல்பாதின் நயீப், “இந்த உலகக் கோப்பையில் அணியின் சீனியர் வீரர்களையே நாங்கள் அதிகமாக நம்பியிருந்தோம். ஆனால் அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்றபடி செயல்படவில்லை. அவர்கள் நான் சொன்னதைக் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை. போட்டிகளில் தோல்வியடைந்த போதும் வருத்தமே இல்லாமல் சிரித்துக்கொண்டு இருந்தனர்” எனக் கூறியுள்ளார்.

ICCWORLDCUP2019, INDVSAFG, GULBADINNAIB, AFGHANISTAN, RASHIDKHAN, CAPTAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்