‘கின்னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் மோசடி வழக்கில் கைது’.. கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கின்னஸ் சாதனை படைத்த ஆந்திராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வீரர்கள் தேர்வுக்குழு தலைவர் எம்.கே.பிரசாத் கடந்த சில நாள்களுக்கு முன்பு செல்போனில் உள்ள ட்ரு காலர் ஆப்பில் தனது பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக ஆந்திராவைச் சேர்ந்த நாகராஜூ என்பவரின் மீது சைபர் க்ரைம் போலிஸாரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனை அடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நாகராஜூ என்பவர் கடந்த 2016 -ம் ஆண்டு 82 மணிநேரம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி கின்னஸ் சாதனை படைத்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரஞ்சி டிராபி போட்டியில் ஆந்திரா அணி சார்பாகவும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் எம்.கே.பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர் நாகராஜூவை போலிஸார் கைது செய்துள்ளனர். இவர் எம்.கே.பிரசாத் குரலில் பேசி ரூ.5 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கிரிக்கெட் தேர்வு குழு தலைவரின் குரலில் பேசி மோசடி செய்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

BCCI, MSK PRASAD, CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்