“நீங்க அடுத்த வருஷம் எங்க டீமுக்கு வரணும்”.. மெசேஜ் செய்து MI ‘ஸ்டார்’ ப்ளேயருக்கு அழைப்பு விடுத்த ஹர்திக் பாண்ட்யா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் வீரர் ஒருவரை குஜராத் அணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | “நான் சிங்கிள் அடிக்கவான்னு கேட்டேன், ஆனா..!” சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் வார்னர் சொன்ன வார்த்தை..!

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் போட்டி இன்று (06.05.2022) மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

புள்ளி பட்டியலில் 8 வெற்றிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும். குஜராத் அணியை வெற்றிகரமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தி வருகிறார். இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 2-ல் மட்டுமே குஜராத் அணி தோல்வி அடைந்துள்ளது. அதேவேளையில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 1-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடத்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த பாண்ட்யா தற்போது அதே அணியை எதிர்த்து கேப்டனாக களமிறங்குகிறார். இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்ட்யா, ‘நான் எப்போதும் என்னை நீல நிற ஜெர்ஸியில் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் எனது சொந்த மாநிலத்துக்காக நீல நிற ஜெர்சியில் களமிறங்குவது இன்னும் சிறப்பு வாய்ந்த ஒன்று. மும்பை அணிக்காக விளையாடியது குறித்த பல நல்ல நினைவுகள் உள்ளன’ என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நான் சில நாட்களுக்கு முன்பு பொல்லார்டுக்கு மெசேஜ் செய்தேன். அப்போது அவரிடம், நீங்கள் அடுத்த வருடம் எங்கள் அணிக்கு வரவேண்டும், இது என் விருப்பம் என கூறினேன். ஆனால், அது ஒருபோதும் நடக்காது என்று எனக்குத் தெரியும்’ என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, HARDIK PANDYA, GT CAPTAIN HARDIK PANDYA, MUMBAI INDIANS, MI, MI POLLARD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்