'நீ இப்போ விளையாட வேண்டாம்னு சொன்னாரு...' 'அது ஏன்னு இப்போ தான் எனக்கு புரியுது...' - வெற்றி பெற்றது 'எப்படி' என பகிர்ந்த இந்தியாவின் 'தங்க' மகன்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ், தன் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தவற்றை குறித்து பகிர்ந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரரான நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் சுமார் 87.58 மீ. தூரம் வீசி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தன்னுடைய அனுபவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார். அதில், 'பொதுவாக உலகமே திரும்பி பார்க்கும் ஒலிம்பிக் மாதிரியான போட்டிகள் ஒரு வீரருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால், எனக்கு இந்த ஒலிம்பிக் போட்டியில் எந்த வித அழுத்தமும் ஏற்படவில்லை.
நான் விளையாடிய சர்வதேச போட்டிகள் எனக்கு நிறைய உதவின. இதனால், ஒலிம்பிக்கில் அழுத்தத்தை உணராமல் எனது ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த முடிந்தது.
நம்முடைய சிறப்பான முதல் எறிதல் நமக்கு நம்பிக்கையைத் தரும், அதேப்போல் அது மற்ற வீரர்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கும்.
என் தனிப்பட்ட சாதனை அதிகபட்சமாக 88.07 மீட்டர். ஆனால் என் கவனம் எப்போதும், ஒலிம்பிக் சாதனையான 90.57 மீட்டரை முறியடிக்க வேண்டும் என்று இருக்கும். அதை நோக்கியே என் இலக்கு இருந்தது. என்னால் முடிந்தவற்றைச் செய்தேன். ஆனால், முறியடிக்க முடியவில்லை. 90 மீட்டர் இலக்கை விரைவில் எட்டுவேன்.
ஒரு முறை அடில் சார் என்னை அழைத்து 'நீ தற்போது விளையாடக் கூடாது, ஒலிம்பிக்கில் கவனம் செலுத்த வேண்டும்' எனக் கூறினார். அதனால் சில விளையாட்டுக்களை ரத்து செய்து ஒலிம்பிக்கில் கவனம் செலுத்தினேன். அது நல்ல முடிவு என தற்போது நினைக்கிறேன். நான் கடுமையாக உழைத்து நன்றாகத் தயாரானேன்.
ஒலிம்பிக்கில் எந்தவொரு போட்டியும் ஒருநாள் போட்டி என நான் கருதவில்லை. வருடக்கணக்கிலான கடுமையானப் பயிற்சியும், பலரது ஆதரவும்தான் என்னை இந்த சாதனையை அடையச் செய்தது' எனக் கூறியுள்ளார் தங்க மகன் நீரஜ் சோப்ரா.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்