சிக்ஸ் அடிச்சதும்.. மைதானத்தில் இருந்து வெளியே ஓடிய கிரிக்கெட் வீரர்.. பரபரப்பு வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ள முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர், தற்போது நியூசிலாந்து நாட்டில் வைத்து நடைபெறுகிறது.

Advertising
>
Advertising

இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கடைசியாக நடைபெற்றிருந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதி இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் டெவான் கான்வே 70 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய கிளென் பிலிப்ஸ், அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து 18 ஆவது ஓவரில் போட்டியை முடித்து வைத்தார்.

முன்னதாக, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது தங்களின் வெற்றிக் கணக்கை நியூசிலாந்து அணி தொடங்கி உள்ளது. மறுபக்கம், இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது வங்காளதேச அணி. நான்காவது லீக் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள், நாளை (11.10.2022) மோத உள்ளன.

இந்நிலையில், இந்த போட்டியின் இறுதியில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து அணிக்காக கடைசியில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்திருந்தார் கிளென் பிலிப்ஸ். அவர் அடித்த வெற்றி சிக்ஸர், மைதானத்தில் போட்டியைக் காண வந்திருந்த சிறுமி ஒருவர் மீது பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனை அறிந்ததும் உடனடியாக மைதானத்தில் ரன் அடித்த வேகத்தில் ஓடிய கிளென் பிலிப்ஸ், சிறுமியின் நிலை குறித்து மைதானத்திற்கு வெளியே சென்று கேட்டு தெரிந்து கொண்டார்.

தொடர்ந்து சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குணமடைந்து வீட்டிற்கு திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சிறுமி மீது தான் அடித்த பந்து பட்டதால், உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறி சென்று பார்த்த கிளென் பிலிப்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இது தொடர்பான வீடியோக்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

GLENN PHILLIPS, NZ VS BAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்