மனநல பிரச்சினை.. கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுத்த.. பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணியின் பிரபல ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் கிரிக்கெட்டில் இருந்து, சில காலம் விலகி இருக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் நாளை நடைபெறவுள்ள 3-வது போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். மனநிலை பிரச்சினைகளால் மேக்ஸ்வெல் அவதிப்படுவதாகவும், அதனால் கிரிக்கெட்டில் இருந்து சிலகாலம் அவர் விலகி இருப்பார் எனவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா சைக்காலஸிட் மைக்கேல் லாய்டு கூறுகையில், ''கிளென்  மேக்ஸ்வெல் மனதளவில் சிறு தடுமாற்றத்தை சந்தித்துள்ளார். அதனால் சில காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளார்,'' என்றார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மேனேஜர் பென் ஆலிவர் இதுகுறித்து கூறுகையில், '' வீரர்களின் உடல்நலம் தான் முக்கியம். மேக்ஸ்வெல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான இடைவேளை கொடுக்கும்படி கேட்டு கொள்கிறோம். மேக்ஸ்வெலுக்கு தேவையான முழு ஆதரவும் வழங்கப்படும்,'' என தெரிவித்துள்ளார்.

முதல் டி20 போட்டியில் அரை சதம் அடித்த மேக்ஸ்வெல் கிரிக்கெட்டில் இருந்து சிலகாலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்