போடு.. கல்யாண பத்திரிகை தமிழ்'லயா.. பிரபல ஆஸி வீரர் கரம் பிடிக்கும் பெண் யார்னு பாருங்க..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். பல போட்டிகளில், அதிரடி பேட்டிங் என பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த இவர், ஐபிஎல் போட்டிகளிலும் தன்னுடைய அதிரடி மூலம், ஒரு ரவுண்டு வந்தார்.

Advertising
>
Advertising

கடந்த சீசனில், பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த மேக்ஸ்வெல்லை, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்பாக அந்த அணி தக்க வைத்துக் கொண்டது.

தொடர்ந்து, மற்ற வீரர்களை இன்று நடைபெற்று வரும் மெகா ஏலத்தில், பெங்களூர் அணி தேர்வு செய்து வருகிறது.

மேக்ஸ்வெல்

இந்நிலையில், கிளென் மேக்ஸ்வெல்லின் திருமண பத்திரிகை, தமிழ் மொழியில் இருப்பது பற்றி, இணையத்தில் அதிகம் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியா பெண் வினி ராமன். இவர் மெல்போர்ன் பகுதியில், பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். வினி ராமன் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான்.

காதல் ஜோடி

இந்நிலையில், மேக்ஸ்வெல்லும், வினி ராமனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு, இருவரும் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். அது மட்டுமில்லாமல், இந்த நிச்சயதார்த்தம், இந்திய முறைப் படியும் நடைபெற்றிருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள், அதிகம் வைரலாகி இருந்தது. அதே போல, மேக்ஸ்வெல் - வினி ராமன் காதல் ஜோடி, ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் அதிகம் இணையத்தில் லைக்குகளை அல்லி வந்தது.

தமிழில் திருமண பத்திரிக்கை

தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக, திருமணம் தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம், வரும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

வைரலாகும் புகைப்படம்

அது மட்டுமில்லாமல், இவர்களின் திருமண அழைப்பிதழ், தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் திருமணம் பத்திரிக்கை, தமிழில் இருக்கும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அதே போல, மேக்ஸ்வெல் - வினி ராமன் ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

GLENN MAXWELL, VINI RAMAN, WEDDING INVITATION, VIRAL, TAMIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்