"இதுனால தான் உங்களுக்கே சான்ஸ் கெடச்சுது?.." இன்ஸ்டாவில் கிண்டல் செய்த 'ரசிகர்'... தரமான 'பதிலடி' கொடுத்த 'கில்'.. வைரலாகும் 'கமெண்ட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அணியைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

"இதுனால தான் உங்களுக்கே சான்ஸ் கெடச்சுது?.." இன்ஸ்டாவில் கிண்டல் செய்த 'ரசிகர்'... தரமான 'பதிலடி' கொடுத்த 'கில்'.. வைரலாகும் 'கமெண்ட்'!!

இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வரும் இந்திய இளம் வீரர் சுப்மன் கில், நேற்று அணிக்குள்ளயே நடைபெற்ற பயிற்சி போட்டி ஒன்றில், அதிரடியாக ஆடி ரன் குவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த பயிற்சி ஆட்டத்தின் போது தான் பேட்டிங் செய்த புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில் பகிர்ந்திருந்தார்.
gill hits back at a troll who questioned his place in kkr

முன்னதாக, கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக கில் ஆடிய போது, சற்று குறைவான ஸ்ட்ரைக் ரேட்டையே வைத்திருந்தார். அது மட்டுமில்லாமல், நிதானமான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், சுப்மன் கில்லிற்கு இடம் கிடைத்திருந்தது.


இதனைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர், கில் பகிர்ந்த புகைப்படத்தின் கீழ், 'ஐபிஎல் தொடரில் கில் ஆடியதை வைத்து, அவரை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்தனர். இதிலிருந்து, கடந்த சீசனில் கில் எந்த அளவுக்கு டி 20 போட்டிகளில் பொறுமையாக ஆடியுள்ளார் என்பது தெரியும்' என கிண்டலாக கமெண்ட் செய்திருந்தார்.gill hits back at a troll who questioned his place in kkr

 

ரசிகரின் இந்த வேடிக்கையை அப்படியே விடாமல், பதிலுக்கு கில் கூறியுள்ள கருத்து, நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. 'இருந்தாலும், நான் விரும்பும், சிறப்பான ஒரு இடத்தில் தான் தற்போது இருக்கிறேன்' என தன்னை நக்கல் செய்த ரசிகருக்கு அசத்தல் பதிலடியை கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், கமெண்ட் செய்த நபரை 'Mr. Nobody' என்றும் கில் குறிப்பிட்டுள்ளார்.

தான் இந்த இடத்திற்கு வருவதற்கு பின்னால் உள்ள கஷ்டங்களை பற்றி நினைக்காமல், மனம் போல கிண்டலும் விமர்சனமும் செய்த ரசிகர் ஒருவருக்கு வேற லெவலில் கில் தெரிவித்துள்ள கருத்து, அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்