ஒருவேளை மேட்ச் டிரா ஆனா யார் ‘வின்னர்’-னு எப்படி முடிவு பண்றது..? ஐசிசிக்கு கவாஸ்கர் கொடுத்த சூப்பர் அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றியாளரை தேர்வு செய்வது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின், முதல் நாள் ஆட்டமே மழையால் தடைப்பட்டது. இதன்பின்னர் 2-வது மற்றும் 3-ம் நாள் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், நேற்றைய 4-ம் நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 49 ரன்களும், கேப்டன் விராட் கோலி 44 ரன்களும் அடித்தனர். நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை கெயில் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதனை அடுத்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதுவரை 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை எடுத்து வலுவான நிலையில் அந்த அணி உள்ளது.
மழையால் 2 நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளதால், ரிசர்வ் டே எனப்படும் 6-வது நாள் கண்டிப்பாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 2 நாட்களில் 3 இன்னிங்ஸ்கள் ஆட வேண்டியுள்ளதால், பெரும்பாலும் போட்டி டிரா ஆகவே வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால் இரு அணிகளுமே சாம்பியன் என ஐசிசி அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இப்போட்டியின் வெற்றியாளரை முடிவு செய்வது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை கூறியுள்ளார். அதில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில்தான் முடியும். அதனால் சாம்பியன் பட்டம் இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இதற்குமுன் ஐசிசி தொடர்களின் இறுதி முடிவு எட்டாமல் இருந்ததில்லை. இதுதான் முதல்முறை. இப்போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. இரு அணிகளும் பேட்டிங்கில் மிக மோசமாக விளையாடினால் மட்டுமே போட்டி சரியாக முடிவடையும்.
கால்பந்து போட்டிகள் டிராவில் முடிந்தால், பெனால்டி ஷூட் மூலம் வெற்றியாளர் யார் என முடிவு செய்யப்படும். டென்னிஸ் போட்டிகளிலும் இதேபோல் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுபோன்ற விதிகள் இல்லை. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் புதிய விதி குறித்து ஐசிசி நிச்சயம் ஆலோசிக்க வேண்டும். அதன்மூலம் இனிமேல் வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்’ என சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வாக்கி டாக்கியில சிராஜ் அப்படி என்ன பேசியிருப்பாரு..? சிக்கிய ஒரே ஒரு போட்டோ.. வகை வகையாக ‘மீம்ஸ்’ போட்ட நெட்டிசன்கள்..!
- ‘அவர் இந்திய அணிக்கு கிடச்ச வரம்’!.. கொஞ்சம் அவரோட ‘ரெக்கார்ட்’-ஐ எடுத்துப் பாருங்க.. தமிழக வீரரை தாறுமாறாக புகழ்ந்த பும்ரா..!
- 'இந்திய அணியில் ஒரு இங்கிலாந்து தாதா'!.. அசுரத்தனமான பவுலிங்... புது வரலாறு படைத்த இஷாந்த் சர்மா!
- VIDEO: ‘அவருக்கு அடிக்கவே தெரியல’!.. நியூஸிலாந்து பேட்ஸ்மேனை ‘கிண்டல்’ செய்த கோலி.. காட்டிக்கொடுத்த ஸ்டம்ப் மைக்..!
- ‘இது ஒன்னும் இந்தியா கிடையாது பேட்டை தாறுமாறாக சுத்த’!.. ரிஷப் பந்துக்கு முன்னாள் வீரர் சொன்ன காட்டமான அட்வைஸ்..!
- ‘லேசாக சிணுங்கும் மழை’!.. கிரவுண்டை போட்டோ எடுத்து ‘இன்ஸ்டா’ ஸ்டோரி போட்ட DK.. கேப்ஷன் என்ன தெரியுமா..?
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்... அஜித் ரசிகர்கள் செய்த குறும்பு!.. உலக அளவில் கவனத்தை ஈர்த்த சம்பவம்!.. விரைவில் குட் நியூஸ்!?
- WTC Final: யாருய்யா அது ‘பைனாகுலர்’ வச்சு மேட்சை பாக்குறது..? இணையத்தில் வைரலான போட்டோ..!
- VIDEO: தலைவன் என்னைக்குமே ‘வேற மாதிரி’ தான்.. ‘எல்லாரும் அவரைப் பார்த்து கத்துக்கோங்க’!.. செம ‘ஜாலி’ மூடில் கோலி..!
- VIDEO: ‘DK அண்ணா.. DK அண்ணா’!.. இங்கிலாந்து மண்ணில் கேட்ட தமிழ்.. சட்டென திரும்பி தினேஷ் கார்த்திக் சொன்ன விஷயம்.. ‘செம’ வைரல்..!