“கோலிக்கு ஒரு ரூலு... நடராஜனுக்கு ஒரு ரூலா...??? பாவம்யா, நடராஜன்...!!” - தமிழக வீரருக்காக கோபத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்!!! - என்ன நடந்தது, நடராஜனுக்கு??!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

குழந்தைப் பிறப்புக்கு கோலி விடுப்பு எடுத்துக் கொண்டு சென்ற, அதே காரணத்துக்காக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் டி.நடராஜனுக்கு விடுப்பு கொடுக்கப்படாததை ஒப்பிட்டு இருவருக்கும் தனித்தனி நீதியா என்று கேட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

இது தொடர்பாக “நடராஜன் மட்டும் மொத்த தொடரும் முடிந்து தான் வீட்டுக்குச் சென்று தனக்கு பிறந்த பெண் குழந்தையை முதல் முறையாக பார்க்க வேண்டும், ஆனால் கேப்டன் (கோலி) மட்டும் முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் தன் முதல் குழந்தையை முதன் முதலாக பார்கக்ச் சென்றிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அஸ்வினுக்கு ஒரு நீதி மற்ற ஸ்டார் பேட்ஸ்மென்களுக்கு ஒரு நீதியா? என்றும் கேள்வி எழுப்பிய கவாஸ்கர், இந்திய அணி நிர்வாகம் ஓரவஞ்சனைப் போக்குகளுடன் இருப்பதாக சாடியுள்ள கவாஸ்கர், பவுலர்களுக்கு ஒரு ரூல், அணியில் நன்கு காலூன்றி விட்ட பேட்ஸ்மென்களுக்கு வேறொரு ரூலா? என்றும் கடுமையாக சாடியுள்ளார். உள்ளதை உள்ளபடி கூறும் அஸ்வின், அதன் காரணமாகவே பாதிக்கப்படுவதாக கூறிய சுனில் கவாஸ்கர், அகாட்டுமிராண்டித் தனமானவர்கள் தான் அஸ்வினின் பவுலிங் திறமைகள் மீது  சந்தேகப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பவுலிங் திறமைகள் மீதான சந்தேகங்களுக்காக அஸ்வின் பல நேரங்களில் ஒதுக்கப் படுவதில்லை, மனதில் பட்டதை நேரடியாக சொல்வதாலேயே அஸ்வின் ஒதுக்கப்படுகிறார். ஆனாலும் மற்ற வீரர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று சாடியுள்ளார். 4 டெஸ்ட் சதங்கள், 350 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அஸ்வின் மாதிரியான ஒரு பந்துவீச்சாளரை வரவேற்காத நாடே இருக்காது. ஆனால், ஒரு போட்டியில் அவர் விக்கெட்டுகளைக் குவிக்காமல் இருந்தாலும் உட்கார வைக்கப்படுவார்.

ALSO READ: 'இந்த ரஜினி, கமல் 2 பேரையும் அடிக்குற அடியில'.. 'இனி எந்த நடிகனும்'... 'இது விஜய்க்கும் சேர்த்துதான்!'.. 'ரஜினி படத்தையே உதாரணம் காட்டி'.. கொந்தளித்த சீமான்!.. வீடியோ!

எனினும் நட்சத்திர பேட்ஸ்மென்களுக்கு இப்படி நடப்பதில்லை, எந்த அளவுக்கு அவர்கள் சொதப்பினாலும் மீண்டும் மீண்டும் ஆட முடியும். அவர்களுக்கு ஒரு நீதி, அஸ்வினுக்கோ வேறொரு நீதி என்று பொருமியுள்ளார். மேலும், “நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால், அஸ்வினையும், நடராஜனையுமே கேளுங்கள், டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்று!” என்று குறிப்பிட்டுள்ளார். 2017-ல் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளுக்கு எதிராக ஆடிய போட்டிதான் அஸ்வின் கடைசியாக ஆடிய ஒருநாள் போட்டி.  அதில் இந்தியா வென்றது. எனினும் பிறகு ‘ஒருநாள்’ போட்டிகளில் அஸ்வின் சேர்க்கப்படாமல் இருந்தார்.

பின்னர் அடிலெய்ட் பிட்சுக்கு ஏற்றவாறு பந்து வீச்சை மாற்றி அபாரமாக வீசி ரன் மெஷின் ஸ்மித்தை காலி செய்தார்.  ஆகவே, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியில் அஸ்வின் மீண்டும் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கவாஸ்கரின் இந்த பேச்சு உருவாகியுள்ளது. அவரை மீண்டும் அழைக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்