‘என்னோட டி20 டீம்ல தோனி கிடையாது’... 'கிரிக்கெட் ஜாம்பவானின் அதிரடி பேச்சு'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்குப் பின், தோனியின் ஓய்வு குறித்து பலரும், பலவிதமாக கூறிவருகின்றனர். ஆனால் இதுகுறித்து தோனி தனது கருத்தை, இதுவரை பதிவு செய்யவில்லை.  இந்நிலையில் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் ‘இந்தியா டூடே’வுக்கு அளித்தப் பேட்டியில், ‘தோனிக்கு தற்போது 38 வயதாகிறது. அடுத்த வருடம் டி20 உலக கோப்பையில், அவருக்கு 39 வயது ஆகி விடும்.

எனவே தோனி ஓய்வு பெற, இதுவே சரியான தருணம் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகச்சிறந்த வீரர் உலக அளவில் அவருக்கு இருக்கும் ரசிகர்களில், நானும் ஒரு ரசிகன் தான். அவருடைய பேட்டிங், கேப்டன்ஷிப் மற்றும் களத்தில் அவர் செய்யும் அனைத்து விடயங்களும் எனக்கு பிடிக்கும். இருப்பினும் அவர் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது. எனவே தேர்வு குழுவினர் அவரை ஒதுக்கும் முன், தானாக முன்வந்து தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டால், தோனிக்கு நல்லதாக இருக்கும்.’  

மேலும், ‘எனது உலகக் கோப்பை டி20 அணியில் தோனிக்கு இடம் கிடையாது. தோனியின் காலம் முடிந்துவிட்டது. இனி அவர் இடத்தில் யாரைக் கொண்டு வருவது என்பது குறித்துதான் யோசிக்க வேண்டும். என்னுடைய கருத்து, அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு, ரிஷப் பந்தை தயார் செய்ய வேண்டும். ஒருவேளை அவர் தவறும் பட்சத்தில், அவருக்குப் பதில் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யலாம். தோனியை தாண்டி நாம் யோசிக்க வேண்டிய தருணம் இது’ என்றார். இதனால் தோனியின் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

MSDHONI, SUNILGAVASKAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்