"பாக்கத்தான போறீங்க இந்த கோலியோட ஆட்டத்த".. செம்மா.. கோலியை பாராட்டி தள்ளிய முன்னாள் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 100-வது டெஸ்ட்டில் விளையாட உள்ள நிலையில் அவரை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Advertising
>
Advertising

கிங் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிரிக்கெட் உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் ஆகட்டும், டெஸ்ட் ஆகட்டும், டி20 ஆகட்டும் அவர் செய்யாத சாதனைகள் இல்லை. ஒரு காலத்தில் களத்திற்கு சென்றாலே 50 அல்லது 100 ரன் எடுக்காமல் அவர் பெவிலியன் திரும்ப மாட்டார்.

 

100-வது டெஸ்ட்

கிங் கோலி நாளை மறுதினம் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்த போட்டியில் கோலிக்கே உரிய வெறித்தனமான ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

சதமடித்து கொண்டாடுவார்

இந்த நிலையில்தான் கோலியை புகழ்ந்து தள்ளியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய கவாஸ்கர், 'விராட் கோலி ஒரு அற்புதமான வீரர்.அவர்  தனது 100-வது டெஸ்டில் சதமடித்து கொண்டாடுவார்' என்று கூறியுள்ளார். ''இது ஒரு சாதனை உணர்வாக இருக்கும். நீங்கள் பள்ளி குழந்தையாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கும் போது, ​​ஒரு குறிப்பிட்ட காலம் இந்தியாவுக்காக விளையாடுவீர்கள் என்று நம்புகிறீர்கள், திடீரென்று வெற்றி உங்களைத் தேடி வரும். அந்த உணர்வை வெறும் வார்த்தையால் விவரிக்க முடியாது'' என்றும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

 

மேலும், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், இந்த டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சொந்த மண்ணில் இந்தியா இலங்கையிடம் இதுவரை தோற்றதில்லை என்று கூறியுள்ளார்.

VIRATKOHLI, TEST MATCH, , SRILANKA MATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்