“இந்த பையன் சான்ஸே இல்ல..! என்னா திறமை தெரியுமாங்க..?”- கவாஸ்கர் புகழ்ந்து தள்ளும் ‘அந்த’ இளம் சிஎஸ்கே வீரர் யார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் மூலம் ஜொலிக்கும் இளம் வீரர்களைப் பார்க்க உற்சாகமாக இருப்பதாக முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். மேலும், அப்படி ஜொலித்த இளம் வீரர்கள் சர்வதேச அளவில் மிளிரும் வகையில் இந்திய அணியிலும் இடம் பிடித்து வருகின்றனர் என்பது தனக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

விரைவில் தொடங்க இருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் விளையாடப் போகும் இந்திய அணி பட்டியல் வெளியானது. தங்களது அசத்தலான ஆட்டத்தால் இந்த நியூசிலாந்து டி20 தொடரில் விளையாட 4 வீரர்கள் களம் இறங்க உள்ளனர். இதில் ஹர்ஷல் படேல், வெங்கடேஷ் ஐயர் மற்றும் அவேஷ் கான் ஆகிய மூவரும் இந்திய அணியில் முதல் முறையாக அறிமுகம் ஆகின்றனர். இலங்கை தொடருக்குப் பின்னர் தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.

அணியில் மேற்குறிப்பிட்ட 4 இளம் வீரர்களும் இணைக்கப்பட்டு இருப்பது மிகவும் சரியான முடிவு என்றும் திருப்திகரமானது என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் குறித்து அதிகப்படியாகவே புகழ்ந்து வருகிறார் கவாஸ்கர். ஐபிஎல் 2021 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய கெய்க்வாட் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆக பாராட்டப்பட்டார். 24 வயதில் இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்த கெய்க்வாட்-க்கு தற்போது மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இலங்கை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் இந்த இரண்டாம் வாய்ப்பில் இந்தியாவின் மிகச்சிறந்த ஆட்டக்காரர் ஆக கெய்க்வாட் வளர்வார் என கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கவாஸ்கர் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரையில் கெய்க்வாட் மிகச்சிறந்த திறமையாளர். வரும் காலங்களில் கிரிக்கெட்டின் மூன்று விதமான ஆட்டங்களிலும் விளையாடத் தகுதி வாய்ந்தவர் ஆக கெய்க்வாட் இருப்பார். அவரிடம் சிறந்த ஆட்ட நுணுக்கங்கள் உள்ளது. எந்தவொரு நெருக்கடியான சூழல்களிலும் அந்த அழுத்தத்தைத் தாங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆக கெய்க்வாட் வளர்ந்து வருவதைப் பார்க்கும் போது உற்சாகமாக இருக்கிறது” எனப் பேசியுள்ளார்.

கெய்க்வாட் மட்டுமல்லாது 2021 ஐபிஎல் போட்டிகளில் ஹர்ஷல் 32 விக்கெட்டுகள் எடுத்து அதிகப்படியான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெயர் பெற்றார். இரண்டாம் இடத்தில் 24 விக்கெட்டுகள் வீழ்த்திய அவேஷ் உள்ளார். அதேபோல், ஐபிஎல் 2021 சீசனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என மூத்த கிரிக்கெட் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகிறார் வெங்கடேஷ் ஐயர்.

CRICKET, GAVASKAR, RUTURAJ GAIKWAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்