‘கோலி இல்லனா என்ன?’... ‘கேப்டனா அவர் இருந்தப்போ ஜெயிச்சுருக்காரு’... ‘அதனால அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில்’... ‘அவருக்கு நெருக்கடி வராது’... ‘கவாஸ்கர் குறிப்பிட்ட சீனியர் வீரர்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரஹானே கேப்டன் பொறுப்பு ஏற்கும்போது, அவர் மீது எந்தவிதமான அழுத்தமும் திணிக்கப்படாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவாக, பிங்க் பந்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியுடன் கேப்டன் விராட் கோலி, குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்ப உள்ளநிலையில், தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது, 'விராட் கோலி நாடு திரும்பியவுடன் இந்திய அணியை வழிநடத்தும் ரஹானேவுக்கு உண்மையில் எந்த நெருக்கடியும் இருக்காது.
ஏனென்றால், இரு முறை இந்திய அணியை ரஹானே வழிநடத்திச் சென்று வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தர்மசலாவில் இந்திய அணியை வழிநடத்திய ரஹானே அதில் வெற்றி பெற்றுக் கொடுத்தார். அதேபோல, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் அணியை வழிநடத்தி ரஹானே வெற்றி பெற்றுக் கொடுத்தார். கேப்டன்ஷிப்பைப் பொறுத்தவரை, ரஹானேவுக்கு எந்தவிதமான நெருக்கடியும் இருக்காது.
எந்த நேரத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று அவருக்குத் தெரியும். 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக ரஹானே செயல்பட்டுள்ளார். இதனால் அணிக்கு கேப்டனாகச் செயல்படுவது அல்லது கேப்டனாக அணியை வழிநடத்துவது ரஹானேவின் சிந்தனையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ரஹானே அவரின் கேப்டன் பணியை நேர்மையாகச் செய்வார். பேட்ஸ்மேனாக அவர் பொறுப்பாக விளையாடுவார். அவர் களமிறங்கி, புஜாரா விளையாடுவதைப் போல் எதிரணிக்கு நிச்சயம் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் விளையாடுவார்.
ஷாட்களையும் அடிப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானேவின் பேட்டிங் சிறப்பாகவே இருக்கும். இதில் எந்தக் கேள்வியும் இருக்காது.கிரிக்கெட் விளையாடினாலும் சரி அல்லது விளையாடாவிட்டாலும் சரி. ரஹானே மனநிலையில் மாற்றம் வரும் என நினைக்கவில்லை. அவர் மனதளவில் வலிமையானவர்.
பேட்டிங்கை விரும்பிச் செய்பவர். அதனால்தான் கிரீஸில் நீண்ட நேரம் நின்று ரஹானே விளையாடுவார். பந்துவீச்சாளர்களை நம்பிக்கையிழக்கச் செய்வதை விரும்புவார். கடந்த இரு ஆண்டுகளில் ரஹானேவின் ஷாட்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஷாட்களில் முதிர்ச்சி வந்துள்ளது' என்று அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கேட்ச் பிடிக்கும்போது நடந்த மோதல்’... ‘டென்ஷனான விக்கெட் கீப்பர்’... ‘டீம் மேட்டை அடிக்கப் பாய்ந்ததால் சலசலப்பு’...!!!
- 'டீமை விட்டு அவர தூக்கலாம்னு இருந்த நேரம்’... ‘தோனி கொடுத்த வாய்ப்பு’... ‘சரியா யூஸ் பண்ணிக்கிட்டார்’... ‘பாராட்டி தள்ளிய முன்னாள் வீரர்’...!!!
- 'ஒத்த பவுலர வச்சு... எங்க மொத்த பேரைக்கும் ஸ்கெட்ச்-ஆ'?.. 'funny guys!'.. கோலியின் மாஸ்டர் ப்ளான்!.. ஆஸ்திரேலியா செம்ம ஷாக்!!
- ‘இந்த புகைப்படத்த பாருங்க’... ‘‘இவர மாதிரி இருக்க கத்துக்கோங்க’... ‘இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய’... ‘பாகிஸ்தான் முன்னாள் வீரர்’...!!!
- ‘அப்போ இருந்தது வேற டீம்’... ‘அந்த 3 பேரு இப்ப இருக்காங்க’... ‘இந்திய அணியை எச்சரிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்’...!!!
- 'உன்ன நம்பி 'டீம்'ல எடுத்ததுக்கு... உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட!'.. உச்சகட்ட கோபத்தில் கோலி!
- 'இப்டி ஆடுனா எப்படி தம்பி’... ‘ட்ரோல் செய்யும் ரசிகர்கள்’... ‘மோசமான ஃபார்மால் இளம் வீரரை கழட்டிவிட திட்டம்’...!!!
- ‘இரண்டு தமிழக வீரர்களையும் சேர்த்து’... ‘3 பேரும் ஆஸ்திரேலியாவிலேயே இருங்க’... ‘பிசிசிஐ போட்ட உத்தரவு’... 'வெளியான தகவல்’...!!!
- 'கடைசி ஒரு ஓவர்ல மட்டுமே 22 ரன்!!!'... 'செஞ்சுரி அடிச்சே ஆகணும்'... 'கிடைத்த வாய்ப்பில் மிரட்டி எடுத்த இளம்வீரர்!!!"...
- "எனக்கும் அவர் பௌலிங்ல விளையாடணும்... எல்லோரும் அவர பத்திதான் பேசறாங்க!!!"... 'சச்சின் எதிர்கொள்ள விரும்பும் இளம்வீரர்???'...