“எங்க வைரத்தை திருப்பி கொடுங்க”.. ஐபிஎல் மேட்சுக்கு நடுவே முன்னாள் இங்கிலாந்து வீரரிடம் கவாஸ்கர் கேட்ட கேள்வி.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கோஹினூர் வைரத்தை திருப்பித் தருமாறு கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

“நாங்க வேணா அம்பயர் அனுப்பட்டுமா”.. விராட் கோலி அவுட் சர்ச்சை.. பிசிசிஐயை கிண்டலடித்த நாடு..!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனே மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதுவரை 20 லீக் போட்டிகள் நிறைவடந்துள்ளது. இந்த நிலையில், நேற்று நடந்த 20-வது லீக் போட்டியின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருந்தது. அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் நகைச்சுவையாக பேசிய சம்பவம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அதில், முன்னாள் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆலன் வில்கின்ஸிடம், “இந்தியாவில் இருந்து எடுத்துச் சென்ற அந்த கோஹினூர் வைரத்திற்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்” என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஆலன் வில்கின்ஸ் சத்தமாக சிரித்துவிட்டு “அது எப்போது திரும்பி வரும் என்று நானும் ஆச்சரியத்துடன் காத்துள்ளேன்” என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்துன் சுனில் கவாஸ்கர், ‘உங்களுக்கு ஏதேனும் செல்வாக்கு இருந்தால், அதை பயன்படுத்தி பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் மகாராணியிடம் கேட்டு, அந்த விலைமதிப்பற்ற கோஹினூர் வைரத்தை பெற்று தாருங்கள்’ என ஆலன் வில்கின்ஸிடம் நகைச்சுவையாக கேட்டார்.

இது தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இந்த மாதிரி தைரியமாக கேள்விகளை கவாஸ்கரால் தான் கேட்க முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“அப்படியே என்ன பார்க்கிற மாதிரி இருக்கு.. இந்தியாவுக்காக 100 டெஸ்ட் விளையாடுவார்”.. இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய பாண்டிங்..!

CRICKET, IPL, GAVASKAR, BRITISH COMMENTATOR, KOHINOOR, IPL MATCH, IPL 2022, SUNIL GAVASKAR, ஐபிஎல், சுனில் கவாஸ்கர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்