தோனி கூட அவரை எப்படி கம்பேர் பண்ணுவீங்க..? இது ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பீடு பண்ண சொல்ற மாதிரி இருக்கு.. வெளுத்து வாங்கிய கம்பீர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை புகழ்ந்து கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

ஐபிஎல் (IPL) தொடரின் இறுதிப்போட்டி இன்று (15.10.2021) இரவு 7:30 மணிக்கு துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி இதுவரை 3 முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன. இதனால் இந்த முறை எந்த கோப்பையை வெல்ல உள்ளது? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனமான கௌதம் கம்பீர் (Gautam Gambhir) ESPNcricinfo சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது தோனி, இயான் மோர்கன் ஆகிய இருவரில் யார் சிறந்த கேப்டன் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கௌதம் கம்பீர், ‘இந்த ஒப்பீடே முதலில் தவறு. ஏனென்றால் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எப்போதோ ஓய்வு பெற்றுவிட்டார். இது ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒப்பீடு செய்வதுபோல் உள்ளது.

தோனி ஓய்வு பெற்று, நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளார். அதனால் அவர் ஃபார்மில் இல்லை என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இயான் மோர்கன் இப்போதும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அப்படி இருந்தும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சொல்லப்போனால் இயான் மோர்கனை விட தோனி சிறப்பாகவே பேட்டிங் செய்து வருகிறார்.

எல்லாவற்றையும் விட தோனி, விக்கெட் கீப்பிங், பேட்டிங் மற்றும் கேப்டன்ஷி என மூன்று பொறுப்புகளை சுமந்து வருகிறார். ஆனால் இயான் மோர்கன் பேட்டிங், கேப்டன்ஷி மட்டுமே செய்து வருகிறார். அதனால் தோனியுடன் இயான் மோர்கனை ஒப்பீடு செய்வது எந்தவிதத்திலும் நியாமில்லை’ என கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்