"அப்படி எல்லாம் இருக்க வேணாம்.." ராகுலுக்கு அட்வைஸ் பண்ற கேப்'ல.. தோனியை சீண்டினாரா கம்பீர்??.. என்னங்க சொன்னாரு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அணிகளும் ஏற்கனவே தீவிரமாக பயிற்சியில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

Advertising
>
Advertising

மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளும் மோதுகின்றன.

முந்தைய சீசனில், மொத்தம் எட்டு ஐபிஎல் அணிகள் பங்கு எடுத்திருந்தது. ஆனால், இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக களமிறங்குகின்றன.

லக்னோ அணியின் மென்டார்

இதனால், மொத்தமுள்ள 10 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல, இந்த அணியின் மென்டார் ஆக முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ள கம்பீர், லக்னோ அணியில் இணைந்துள்ளது, அந்த அணிக்கு பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது. அதே போல, ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்டு, வீரர்கள் தேர்விலும் முக்கிய பங்காற்றி இருந்தார் அவர்.

பேட்ஸ்மேன் + கேப்டன்

இதனால், நிச்சயம் கம்பீரின் வரவு, லக்னோ அணிக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் ராகுல் குறித்து சில கருத்துக்களை கம்பீர் தெரிவித்துள்ளார். "லக்னோ அணியை ஒரு கேப்டனாக  ராகுல் தான் களத்திலும், களத்திற்கு வெளியேயும் வழிநடத்த வேண்டும். கேப்டனாக இருக்கும் கே எல் ராகுலை விட, பேட்ஸ்மேனாக இருந்து அணியை வழிநடத்தும் கேப்டன் தான் முக்கியம்.

ரிஸ்க் எடுக்க வேண்டும்

ஒரு கேப்டன் என்றால் அதிகம் ரிஸ்க் எடுக்க வேண்டும். ராகுலும் நிறைய ரிஸ்க்கினை எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்படி எடுத்தால் தான், நாம் வெற்றி பெற்றோமா இல்லையா என்பது தெரிய வரும். இம்முறை குயின்டன் டி காக் தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார். இதனால், ராகுலுக்கு நெருக்கடி இருக்காது. மிகவும் ரிலாக்ஸாக தன்னுடைய பேட்டிங் மற்றும் கேப்டன்சியில் மட்டும் ராகுல் கவனம் செலுத்தினால் போதும்.

மேலும், ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்தால் இந்திய அணியின் கேப்டனாக மாற முடியும் என சொல்கிறார்கள். ஆனால், அவை இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

தோனியை சீண்டிய கம்பீர்?

இதனிடையே, கம்பீர் ராகுலை பார்த்து சொன்ன விஷயம், தோனியை ஒப்பிட்டு சொன்னதாக இருக்குமா என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராகுலை ஒரு பேட்ஸ்மேனாக இருந்து அணியை வழிநடத்தும் கேப்டனாக இருக்க வேண்டும் என கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். அதாவது, சிஎஸ்கே கேப்டன் தோனி, கேப்டனாக இருப்பதன் பெயரில் தான் பேட்டிங் செய்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல், கடந்த இரண்டு சீசன்களில் சிறந்த கேப்டனாக தோனி வலம் வந்தாலும், அவரது பேட்டிங் அதிக விமர்சனத்தினை சந்தித்திருந்தது. இதனால், கேப்டனாக மட்டும் இருக்காமல், பேட்டிங் செய்யும் கேப்டனாக இருக்க வேண்டும் என ராகுலை பார்த்து கம்பீர் சொன்னது, தோனியை மறைமுகமாக சீண்டி பார்க்கிறாரா என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இன்னொரு பக்கம், பொதுவாக கூட கம்பீர் அப்படி சொல்லி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

KLRAHUL, MSDHONI, GAUTAMGAMBHIR, CHENNAI-SUPER-KINGS, IPL 2022, LUCKNOW SUPER GIANTS, CSK, கவுதம் கம்பீர், கே எல் ராகுல், தோனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்